RRR Others USA
www.garudabazaar.com

"உங்க ஃபேவரைட் ஐபிஎல் டீம் எது??.." ரசிகர் கேட்ட கேள்வி.. பிரணிதா சொன்ன பதில்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கன்னட மொழி மூலம் திரை பயணத்தை தொடங்கிய நடிகை பிரணிதா, 'உதயன்' என்னும் திரைப்படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகம் ஆனார்.

actress pranitha about her favourite ipl team

"நீங்க ஆடுறது சரி இல்ல பாலா". எச்சரித்த சிம்பு.. எதிர்த்த தாமரை.. பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

இதனைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தியுடன் 'சகுனி', நடிகர் சூர்யாவுடன் 'மாஸ்' உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் பிரணிதா நடித்துள்ளார்.

இது தவிர, தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் அவர் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு, நிதின் ராஜ் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட பிரணிதா, தொடர்ந்து நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதே போல, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அதிகம் ஆக்டிவாக இருப்பதை பிரணிதா வழக்கமாக கொண்டுள்ளார்.

ரசிகர்களின் கேள்விக்கு பதில்..

தன்னுடைய திருமண புகைப்படங்கள், சினிமா குறித்த அப்டேட், போட்டோஷூட் என ஃபுல் டைம் ஆக்டிவாக பிரணிதாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் இருக்கும். இந்நிலையில், தன்னுடைய  இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரசிகர்கள் கேட்ட பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பிரணிதா பதிலளித்திருந்தார். இதில், அவர் கண்ட திரைப்படங்கள் குறித்தும், திருமண வாழ்க்கை குறித்தும், தன்னுடைய செல்லப்பிராணி குறித்தும், ஐபிஎல் போட்டிகள் குறித்தும் பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் கேட்டிருந்தனர்.

actress pranitha about her favourite ipl team

ஃபேவரைட் ஐபிஎல் டீம்

இவை அனைத்துக்கும் சளைக்காமல் பதிலளித்து வந்தார் நடிகை பிரணிதா. அந்த வகையில், தன்னுடைய ஃபேவரைட் ஐபிஎல் அணி குறித்தும், கிரிக்கெட் வீரர் குறித்தும் ப்ரணிதா சொன்ன பதில், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

"நீங்கள் ஐபிஎல் பார்ப்பீர்களா?. உங்கள் ஃபேவரைட் அணி எது?" என ஒரு ரசிகர் கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த பிரணிதா, "நிச்சயமாக பெங்களூர் அணி தான்" என பெங்களூர் அணியின் புகைப்படத்துடன் குறிப்பிட்டுள்ளார். அதே போல ஃபேவரைட் வெளிநாட்டு வீரர் யார் என ஒருவர் கேட்டார்.

actress pranitha about her favourite ipl team

ஜஸ்ட் மிஸ் ஆயிடுச்சு

இதற்கு பதில் சொன்ன பிரணிதா, "கிறிஸ் கெயில் தான். சமீபத்தில், துபாயில் நாங்கள் தங்கி இருந்த அதே ஹோட்டலில் தான் அவரும் தங்கி இருந்தார். ஆனால், அவருடன் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பை நாங்கள் தவற விட்டோம். அவர் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக ஆடினால், மிகவும் ஃபன்னாக இருக்கும்" என பிரணிதா குறிப்பிட்டுள்ளார்.

actress pranitha about her favourite ipl team

இது தொடர்பான பதிவுகள், தற்போது ஆர்சிபி ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

"நாளைக்கு இருக்கு கச்சேரி" விஜய் ரசிகர்களை எகிற வைத்த நெல்சன் ட்வீட்.. அதுவும் ஒரே வார்த்தைல

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

actress pranitha about her favourite ipl team

People looking for online information on Fans, Favourite IPL Team, Pranitha, Pranitha favourite IPL Team will find this news story useful.