www.garudabazaar.com

BIGGBOSS போறதுக்கு முன்னாடி மைனா நந்தினி வெளியிட்ட வீடியோ.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் நடிகை மைனா நந்தினி வைல்ட் கார்ட் என்ட்ரியாக களமிறங்கி உள்ளார்.

Actress Mynaa Nandhini BIGGBOSS Season 6 Tamil Contestant New Entry

Also Read | ஆரம்பம் பட ஸ்டைலில் அஜித்.. விமான நிலையத்தில் கூடிய நூற்றுக்கணக்கான ரசிகர்கள்! வைரல் வீடியோ

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

Actress Mynaa Nandhini BIGGBOSS Season 6 Tamil Contestant New Entry

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

போட்டியாளர்கள் பல்வேறு குழுவினராக பிரிந்து தற்போது செயல்படுகின்றனர்.

Actress Mynaa Nandhini BIGGBOSS Season 6 Tamil Contestant New Entry

இந்த வார இறுதி எபிசோடில் கமல்ஹாசன் முதல் வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து பேசினார். பின் ஒவ்வொரு போட்டியாளர்கள் பற்றி விமர்சனங்களை எடுத்து வைத்தார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் முதல் வைல்ட் கார்ட் போட்டியாளராக நடிகை மைனா நந்தினி களமிறங்கி உள்ளார். முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் போட்டியாளராக மைனா நந்தினி களமிறங்கி உள்ளது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இன்றைய ப்ரோமோ வீடியோவிலும் மைனா நந்தினி தோன்றியுள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் முன் நடிகை மைனா நந்தினி வெளியிட்ட வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், "ஹாய் மை செல்லக்குட்டிஸ், எல்லாருக்கும்  வணக்கம்!  இன்னைக்கு பிக்பாஸ் ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகுது. நான் பிக்பாஸ் போறேன். இதற்கு முன் கொடுத்த அன்பும் ஆதரவும் தொடர்ந்து கொடுங்க " என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

 

Also Read | பிரபல நடிகர்களுடன் ராகவா லாரன்ஸ் & வடிவேலு.. சந்திரமுகி-2 படத்தின் செம்ம வைரல் BTS!

BIGGBOSS போறதுக்கு முன்னாடி மைனா நந்தினி வெளியிட்ட வீடியோ.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actress Mynaa Nandhini BIGGBOSS Season 6 Tamil Contestant New Entry

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, BIGGBOSS Season 6 Tamil, BIGGBOSS Tamil 6 Contestant New Entry, Myna Nandhini will find this news story useful.