www.garudabazaar.com

'அடுத்தவங்க Plate-ஐ நான் ஏன் Clean பண்ணனும்.?" - பிக்பாஸ் போட்டி.. லக்‌ஷ்மி மேனன் பரபரப்பு வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்வது குறித்து, நடிகை லக்‌ஷ்மி மேனன் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். 

பிக்பாஸ் பற்றி லக்‌ஷ்மி மேனன் கருத்து | Actress Lakshmi menon open statement on biggboss 4 tamil goes viral

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் லக்‌ஷ்மி மேனன். கும்கி, சுந்தரபாண்டியன், வேதாளம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இவர் ரசிகர்களை கவர்ந்தார். மேலும் தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ரீசன்ட் புகைப்படங்கள் வைரல் அடித்தன. 

பிக்பாஸ் பற்றி லக்‌ஷ்மி மேனன் கருத்து | Actress Lakshmi menon open statement on biggboss 4 tamil goes viral

இந்நிலையில் நடிகை லக்‌ஷ்மி மேனன் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்வது குறித்து தனது பளீச் கருத்தை தெரிவித்துள்ளார். பிக்பாஸ் போட்டியில் அவர் கலந்து கொள்கிறார் என்ற செய்தி பரவியதையடுத்து, ''நான் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. இன்னொருவரின் தட்டுகளையும், கழிவறைகளையும் கழுவவும், கேமரா முன்னால் சண்டை போடவும் நான் விரும்பவில்லை'' என அவர் பதிவிட்டார். 

இதையடுத்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ''நான் பதிவிட்ட கருத்தை பார்த்து, பலர் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். முதலில் என்னை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை. நான் எனது பார்வையைதான் சொன்னேன். பல காரணங்களுக்காக எனக்கு பிக்பாஸ் போட்டி பிடிக்கவில்லை. எனது வீட்டில் நானேதான் என் கழிவறையை சுத்தம் செய்கிறான். ஆனால், எனக்கு அதை ஒரு ஷோவில் செய்ய பிடிக்கவில்லை. இதுதான் என நிலைப்பாடு'' என அவர் வீடியோ பதிவிட்டார். 

லக்‌ஷ்மி மேனனின் வீடியோவுக்கு பல்வேறு விமர்சனங்களும் ஆதரவுகளும் வந்த நிலையில், அவர் தனது புதிய பதிவில், ''இப்போது பிக்பாஸ் போட்டி பற்றி பேசி விளம்பரம் தேடி கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை. நான் எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதையே சொல்ல விரும்புகிறான். என்னை ஆதரித்தவர்களுக்கும், ஆதரிக்காதவர்களுக்கும் நன்றி'' என அவர் பதிவிட்டுள்ளார். 

 

'அடுத்தவங்க PLATE-ஐ நான் ஏன் CLEAN பண்ணனும்.?" - பிக்பாஸ் போட்டி.. லக்‌ஷ்மி மேனன் பரபரப்பு வீடியோ. வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் பற்றி லக்‌ஷ்மி மேனன் கருத்து | Actress Lakshmi menon open statement on biggboss 4 tamil goes viral

People looking for online information on BiggBoss 4, Lakshmi menon will find this news story useful.