www.garudabazaar.com

டான்ஸ் ஆடும்போது தவறி விழுந்த லக்ஷ்மி மேனன் - வைரலாகும் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'கும்கி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் லக்ஷ்மி மேனன். தொடர்ந்து 'சுந்தர பாண்டியன்', 'பாண்டிய நாடு', 'கொம்பன்' என பல்வேறு வெற்றிப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளளார்.

Lakshmi Menon's dance video goes Viral on internet | இணையத்தை கலக்கும் நடிகை லக்ஷ்மி மேனனின் டான்ஸ் வீடியோ

தல அஜித்துக்கு தங்கையாக லக்ஷ்மி மேனன் நடித்த 'வேதாளம்' படம் அதிரி புதிரி ஹிட்டானது. மேலும் நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் கலக்கி வருகிறார்.  டி.இமான் இசையில் 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்தில் அவர் பாடிய 'குக்குறு' பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகை லக்ஷ்மி மேனன் டான்ஸ் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கும் லக்ஷ்மி மேனன் திடீரென தவறி விழுகிறார். தரையில் தண்ணீர் இருந்ததை கவனிக்காததால் அவர் தவறி விழுந்ததாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Lakshmi Menon's dance video goes Viral on internet | இணையத்தை கலக்கும் நடிகை லக்ஷ்மி மேனனின் டான்ஸ் வீடியோ

People looking for online information on Lakshmi menon will find this news story useful.