www.garudabazaar.com

இதுக்காக கல்யாணம் பண்ணிக்கணுமா ? - பதிலடி கொடுத்த நடிகை லக்ஷ்மி மேனன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக 'கும்கி' படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் லக்ஷ்மி மேனன். தொடர்ந்து 'சுந்தர பாண்டியன்', 'பாண்டிய நாடு', 'கொம்பன்' என பல வெற்றிப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

actress Lakshmi Menon condemned to her fans comment | ரசிகரின் கமெண்ட்டிற்கு நடிகை லக்ஷ்மி மேனன் கடும் கண்டனம்

தல அஜித்துக்கு தங்கையாக லக்ஷ்மி மேனன் நடித்த 'வேதாளம்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் டி.இமான் இசையில் 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்தில் அவர் பாடிய குக்குறு பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

actress Lakshmi Menon condemned to her fans comment | ரசிகரின் கமெண்ட்டிற்கு நடிகை லக்ஷ்மி மேனன் கடும் கண்டனம்

இந்நிலையில் நடிகை லக்ஷ்மி மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்கிரீன்ஷாட் பகிர்ந்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர் அவரிடம், 'நீங்கள் சீக்கிரம் ஒருவரை திருமணம் செய்துகொண்டு அமைதியான வாழ்வை வாழுங்கள். தயவுசெய்து சினிமாவை விட்டு விலகுங்கள். நீங்கள் ஏஞ்சல்'' என்று குறிப்பி்ட்டுள்ளார்.

அதற்கு லக்ஷ்மி மேனன் அளித்துள்ள பதிலில், ''என் நலம் விரும்பியின் வேண்டுகோளை பாருங்கள். என்னை போன்ற ஏஞ்சல் திருமணம் செய்து கொள்ளவேண்டுமாம். பரிதாபமானநிலை'' என்று விமர்சித்துள்ளார்.

actress Lakshmi Menon condemned to her fans comment | ரசிகரின் கமெண்ட்டிற்கு நடிகை லக்ஷ்மி மேனன் கடும் கண்டனம்

People looking for online information on Lakshmi menon will find this news story useful.