www.garudabazaar.com

குஷ்பூவிற்கு ஃபோனில் வந்த கற்பழிப்பு மிரட்டல்.. கால் செய்தவரின் விவரங்களை சொன்ன நடிகை.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை குஷ்பூ, தனக்கு ஃபோனில் கற்பழிப்பு மிரட்டல் கொடுத்தவரின் விவரங்களை வெளியிட்டுள்ளார். 

நடிகை குஷ்பூவுக்கு கற்பழிப்பு மிரட்டல் | Actress khushbu shares the details of the rape threat she recieved in phone

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கியவர் குஷ்பூ. ரஜினி, கமல் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் இவர் பல படங்களில் ஜோடி சேர்ந்து கலக்கினார். இதையடுத்து இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவருடன் இத்திரைப்படத்தில் மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

நடிகை குஷ்பூவுக்கு கற்பழிப்பு மிரட்டல் | Actress khushbu shares the details of the rape threat she recieved in phone

இந்நிலையில் நடிகை குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தனது பதிவில், ''எனக்கு குறிப்பிட்ட ஒரு ஃபோன் நம்பரில் இருந்து தொடர்ந்து கற்பழிப்பு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஃபோன் செய்பவரின் பெயர் சஞ்சய் ஷர்மா என்றும், இடம் கொல்கத்தா எனவும் காட்டுகிறது. கொல்கத்தா போலீஸ் இந்த விஷயம் என்னவென்று விசாரிக்கவும்'' என அவர் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த குறிப்பிட்ட ஃபோன் நம்பரையும் அவர் வெளியிட்டுள்ளார். 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

நடிகை குஷ்பூவுக்கு கற்பழிப்பு மிரட்டல் | Actress khushbu shares the details of the rape threat she recieved in phone

People looking for online information on Khushboo, Rape Threat will find this news story useful.