''கொரோனா நேரத்துல ராம், ஜானு மாதிரி இருங்க...'' - 'மாஸ்டர்' நடிகை கமெண்ட் - எப்படி இருக்கணும் ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எளிதில் பரவக்கூடியது என்பதால் கொரோனாவில் இருந்து மக்களை காக்க மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அவசியமில்லாமல் வெளியில் வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

மேலும் மக்கள் வீட்டில் இருந்தாலும் சமூக விலகலை கடைபிடிக்குமாறும், அடிக்கடி கைகளை கழுவுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து பிரபலங்களும் அவ்வப்போது தங்கள் சமூக வலதளங்கள் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக 96, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கௌரி கிஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''96  பட ஸ்டில்லை பகிர்ந்து, கொரோனா வைரஸ் அச்சுறுத்தும் இந்த நேரத்தில் ராம் மற்றும் ஜானு போல இருங்கள்'' என்று கேட்டுக்கொண்டுள்ளார்

Entertainment sub editor