கொரோனா அச்சுறுத்தல், பாதுகாத்துக்கொள்ள பாகுபலி பிரபலம் சொல்லும் யோசனை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை முழுமையான தீர்வு காணப்படாததால் மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஸ்வீட்டான தீர்வு சொல்லும் பாகுபலி பிரபலம் Rajamouli's RRR Music director MM Keeravani has a sweet sol

பிரபலங்களும் மக்கள் செய்ய வேண்டியவைகள் குறித்து செய்யக்கூடாதவை குறித்தும் அவ்வப்போது தங்கள் சமூகவலைதள பக்கங்களின் மூலம் பதிவுகள் எழுதி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரஸினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் பாகுபலி, RRR படங்களின் இசையமைப்பாளர் கீரவாணி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எல்லோரும் ஸ்வீட் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புத் தன்மை குறையும் என்பார்கள். அதனால் அது வேண்டாம். அதற்கு பதில் ஸ்வீட்னஸ் இளையராஜா பாட்டு ஒன்று தரும் என்றால் நம் நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிக்கும் என்று தேனே தென்பாண்டி மீனே என்ற பாடலை பாடுகிறார்.

Entertainment sub editor