கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் காட்டிய அன்பு..! எவ்ளோ பெரிய கட் அவுட் பாருங்க.. தெறிக்கவிடும் PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா படம் இன்று (12.05.2022) முதல் தியேட்டரில் வெளியாகியுள்ளது.

Sarkaru Vaari Paata Keerthy Suresh Cut Out at Hyderabad Sudharshan Theatre

Also Read | பிரபல சீரியல் நடிகர்.. கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்திலயா? இத எதிர்பாக்கவே இல்லையே

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா. ராஷ்மிகா மந்தன்னா நடிப்பில் வெளிவந்த 'கீதா கோவிந்தம்' படத்தை தொடர்ந்து `சர்காரு வாரி பாட்டா' படத்தை இயக்குனர் பரசுராம் இயக்கியுள்ளார்.

இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் மகேஷ்பாபு என்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க, ஒளிப்பதிவாளர் மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். மார்த்தாண்ட கே வெங்கடேஷ் எடிட்டராகவும், ஏஎஸ் பிரகாஷ் கலை இயக்குனராகவும் பணிபுரிந்தனர்.

Sarkaru Vaari Paata Keerthy Suresh Cut Out at Hyderabad Sudharshan Theatre

இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

'சர்க்காரு வாரி பாட்டா', படத்தின் மையக் கதை பண மோசடி உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிராக  ஹீரோ களமிறங்கி ஆக்ஷனில் இறங்குவதை மையப்படுத்தி உருவாகியுள்ளது.

Sarkaru Vaari Paata Keerthy Suresh Cut Out at Hyderabad Sudharshan Theatre

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷை 'கலாவதி' என சொல்லி அழைத்து ஒரு பாடல் உருவாகியுள்ளது. சித் ஸ்ரீராம் பாடிய இந்த பாடலும் ஹிட்  அடித்துள்ளது.

Sarkaru Vaari Paata Keerthy Suresh Cut Out at Hyderabad Sudharshan Theatre

இந்நிலையில் இன்று ரிலீசான இப்படத்தை மகேஷ்பாபுவின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். கட் அவுட், பாலாபிஷேகம், வெடி, ஊர்வலம் என அதிகாலையில் இருந்தே திரையரங்குகள் கலைகட்டியுள்ளன. ஒவ்வொரு மாவட்டங்களிலும் மகேஷ்பாபு ரசிகர்கள் கட் அவுட் வைத்து மாஸ் காட்டினர். அதே போல் ஐத்ராபாத்தில் உள்ள சுதர்சன் திரையரங்கில் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு ரசிகர்கள் கட் அவுட் வைத்துள்ளனர்.  மிகவும் அரிதாக ஒரு இளம் நடிகைக்கு ரசிகர்கள் கட் அவுட் வைத்துள்ள நிகழ்வு செம்ம வைரலாகி வருகிறது. 35 அடி உயரமுள்ள இந்த கட் அவுட்டில் கலாவதி பாடலில் வரும் கீர்த்தியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sarkaru Vaari Paata Keerthy Suresh Cut Out at Hyderabad Sudharshan Theatre

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் காட்டிய அன்பு..! எவ்ளோ பெரிய கட் அவுட் பாருங்க.. தெறிக்கவிடும் PHOTOS! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sarkaru Vaari Paata Keerthy Suresh Cut Out at Hyderabad Sudharshan Theatre

People looking for online information on Hyderabad Sudharshan Theatre, Keerthy Suresh, Mahesh Babu, Sarkaru Vaari Paata, Sarkaru Vaari Paata Movie Cut Out will find this news story useful.