சென்சார் ஆன GV பிரகாஷ் நடிக்கும் பேச்சிலர்! எத்தனை மணி நேரம் படம் ஓடும்? வெளியான OFFICIAL தகவல்!
முகப்பு > சினிமா செய்திகள்இசையமைப்பாளர் மற்றும் நடிகர் GV பிரகாஷ் நடித்து இசையமைத்துள்ள பேச்சுலர் திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார்.

'கர்ணன்' 'பேரன்பு' பட ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் பாடல்களுக்கு இசையமைக்க, சித்துக்குமார் பின்னணி இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில், GV பிரகாஷ்க்கு ஜோடியாக நடிகை திவ்ய பாரதி நடித்துள்ளார். இவர்கள் போக இப்படத்தில் முனீஸ்காந்த், பகவதி பெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த படத்தின் முன்னோட்டம், பாடல்கள் பரவலான வரவேற்பை பெற்றுள்ளன. இந்த படத்தின் வெளியீடு கொரோணா காரணமாக தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. தற்போது ஒருவழியாக டிசம்பர் 3,2021 அன்று வெளியாக உள்ளது. இதற்காக முன் வேலைகளான சென்சார் சர்ட்டிபிகேட்டை இந்த படம் பெற்றுள்ளது.
இந்த படத்திற்கு சென்சார் போர்டு A சர்டிபிகேட் கொடுத்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே இந்த படத்தை திரையரங்கில் காண முடியும். மேலும் இந்த படம் 2 மணி நேரம் 57 நிமிடங்கள் ஓடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.