Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

வெளியானது பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் கடைசி படமான கால்ஸ்... டிக்கெட் இலவசமாம்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த நடிகை  வி.ஜே சித்ராவின் கடைசிப் படமான கால்ஸ்  படத்தின் ட்ரெய்லர் பிற மொழி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சித்ரா. ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினாலும், அவரை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றது பாண்டியன் ஸ்டோர் தொடர் தான். அந்த தொடரில் வரும் குமரன், முல்லை ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இப்படி இருக்கும்போது சித்ரா சமீபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சின்னத்திரை மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் வி.ஜே சித்ரா. இன்னமும் அவர் மக்கள் மத்தியில் வாழ்ந்து வருகிறார். அவர் திடீரென  இறந்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Actress chithra last movie calls special offer சித்ராவின் கடைசி படமான கால்ஸ் ஆபர்

சினிமா துறையில் சாதிக்க நினைக்கும் பல பெண்களுக்கு எடுத்து காட்டாக விளங்கிய அவரின் மரணம் பலபேருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் இறப்பிற்கு முன் நடித்த  படம் கால்ஸ் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் 2 மில்லியனுக்கு மேற்பட்ட  பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் சித்ராவின் சமீப கால நிகழ்வுகள் படத்தின் ட்ரெய்லர் உடன் ஒத்துப்போவதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திரு.ஜெ.சபரிஷ் இப்படத்தை  இயக்கியுள்ளார். இந்நிலையில் சித்திராவின் முதல் மற்றும் கடைசி திரைப்படமான கால்ஸ் அவரது பெற்றோர் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு முதல்முறையாக ஒளிபரப்பப்பட்டது. இந்த படத்தினை  பார்த்தவர்கள் கண் கலங்கி "இப்படி ஒரு நல்ல படத்தை பார்க்காமலே சித்ரா போய்விட்டாரே' என்று வேதனையுடன் கூறுவதைப் பார்க்க முடிந்தது.இப்படம் 26 ஆம் தேதி இன்று வெளியாகியுள்ளது. மக்கள் அனைவரும் இப்படத்திற்கு மிகுந்த ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இன்று வெளியாகியிருக்கும் கால்ஸ் திரைப்படம் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஒன்று. எனவே பெண்களை ஊக்குவிக்கும் விதமாக கால்ஸ் படத்தை சென்னை திரையரங்குகளில் காண பெண்களுக்கு அனுமதி இலவசம் என்று படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர். இந்த செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இலவச டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள 9176382842 என்ற  தொலைபேசி எண்ணையும் இணைத்துள்ளனர்.

Tags : Chithra, Calls

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actress chithra last movie calls special offer சித்ராவின் கடைசி படமான கால்ஸ் ஆபர்

People looking for online information on Calls, Chithra will find this news story useful.