www.garudabazaar.com
www.garudabazaar.com

நடிகை சித்ராவின் கடைசி திரைப்படம்... சுவாரசியமான காட்சிகளுடன் வெளியானது Sneak Peek..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த நடிகை  வி.ஜே சித்ராவின் கடைசிப் படமான கால்ஸ் படத்தின் ட்ரெய்லர் பிற மொழி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சித்ரா. ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினாலும், அவரை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றது பாண்டியன் ஸ்டோர் தொடர் தான். அந்த தொடரில் வரும் குமரன், முல்லை ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இப்படி இருக்கும்போது சித்ரா சமீபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சின்னத்திரை மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் வி.ஜே சித்ரா. இன்னமும் அவர் மக்கள் மத்தியில் வாழ்ந்து வருகிறார். அவர் திடீரென இறந்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

vj chithra last movie calls sneak peek நடிகை சித்ராவின் கடைசி திரைப்படம்

சினிமா துறையில் சாதிக்க நினைக்கும் பல பெண்களுக்கு எடுத்து காட்டாக விளங்கிய அவரின் மரணம் பலபேருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் இறப்பிற்கு முன் நடித்த  படம் கால்ஸ் இப்படத்தின் ட்ரெய்லர் 1.70 மில்லியனுக்கு மேற்பட்ட  பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் சித்ராவின் சமீப கால நிகழ்வுகள் படத்தின் ட்ரெய்லர் உடன் ஒத்துப்போவதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திரு.ஜெ.சபரிஷ் இப்படத்தை  இயக்கியுள்ளார்.. இப்படம் 26 ஆம் தேதியன்று திரைக்கு வர தயாராகவுள்ளது. இந்நிலையில் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை சித்ராவின் கடைசி திரைப்படம்... சுவாரசியமான காட்சிகளுடன் வெளியானது SNEAK PEEK..! வீடியோ

Tags : Chithra

தொடர்புடைய செய்திகள்

vj chithra last movie calls sneak peek நடிகை சித்ராவின் கடைசி திரைப்படம்

People looking for online information on Chithra will find this news story useful.