www.garudabazaar.com
www.garudabazaar.com

Video: வெளியான கால்ஸ் பட சிங்கிள் டிராக்.. "சித்து நீங்க பாத்துட்டு இருப்பீங்க" - கதறும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா நடித்த கால்ஸ் திரைப்படத்தின் பிரத்தியேகமான முதல் சிங்கிள் பாடல் பிஹைண்ட்வுட்ஸில் வெளியாகியுள்ளது.

VJ Chitra exclusive 'Calls' single Out சித்ரா கால்ஸ் பாடல்

தொகுப்பாளினியாக தொடங்கி, சின்னத்திரை நடிகையாக பரிணாமம் அடைந்த சித்ரா, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முல்லை கேரக்டர் மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர். அவரது மறைவு அனைவருக்குமே சோகத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதன் பின்னரே அவர் நடித்த கால்ஸ் திரைப்படம் பற்றி அனைவருக்கும் தெரியவந்தது.

வெள்ளித்திரையில் சித்ரா கால் பதித்த படமாக கால்ஸ் திரைப்படம் தயாராகியுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் தற்போது பிஹைண்ட்வுட்ஸில் வெளியாகியுள்ளது. இந்த பாடலில் சித்ரா அன்பும், சந்தோஷமும் நிறைந்த மிடில் கிளாஸ் பெற்றோரின் மகளாக சிறுபிள்ளையில் இருந்து வளர்ந்து பெரிய பெண்ணாகும் வரையில் கதை காண்பிக்கப்படுகிறது.

இந்த பாடலை பார்த்த ரசிகர்கள் , “மிஸ் யூ சித்து” என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். ஒருவர், “சித்து உங்க படத்தோட பாடல் பாருங்க நீங்க கண்டிப்பா பார்ப்பீங்க மிஸ் யூ சித்து” என கமெண்ட் பதிவிட்டுள்ளார். 

சித்ரா மைய கதாபாத்திரமாக நடித்துள்ள இந்த Crime thriller படத்தை  J.சபரிஷ் இயக்கியுள்ளார். டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, R. சுந்தர்ராஜன், தேவதர்ஷினி, வினோதினி வைத்தியநாதன்ம் ஜீவா ரவி, ஸ்ரீரஞ்சனி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. தமீம் அன்சாரி இசையமைத்துள்ளார்.

ALSO READ: "பொசுக்குனு இப்படி கேட்டுட்டீங்களே? இனிமே எப்படி சார் பேய் படத்த ரசிக்குறது?".. வெங்கட் பிரபுவின் ‘வேறலெவல்’ ட்வீட்!

VIDEO: வெளியான கால்ஸ் பட சிங்கிள் டிராக்.. "சித்து நீங்க பாத்துட்டு இருப்பீங்க" - கதறும் ரசிகர்கள்! வீடியோ

Tags : Calls, Chithra

தொடர்புடைய இணைப்புகள்

VJ Chitra exclusive 'Calls' single Out சித்ரா கால்ஸ் பாடல்

People looking for online information on Calls, Chithra will find this news story useful.