SJ சூர்யா - ராதாமோகன் படத்தில் இணைந்த ஹீரோயின்!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 15, 2019 12:05 PM
மான்ஸ்டர்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகும் படத்தில், SJ சூர்யா நடிக்கிறார். இந்த படத்திலும், SJ சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார்.

இதனை நடிகர் SJ சூர்யா ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ் (Angel studios MH LLP) சார்பில் தயாரிக்கிறார். குடும்பங்கள் ரசிக்கும் பல தரமான வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்த இயக்குனர் ராதா மோகன், முற்றிலும் புதிய பாணியில் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராகவும், கதிர் கலை இயக்குனராகவும் பணியாற்றுகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில், நேற்று (அக்.9)ம் தேதி படத்தின் ஷூட்டிங் பணிகள் தொடங்கியது. இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கி ஒரே கட்டமாக முடித்து வரும் 2020 பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தையொட்டி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இப்படத்திற்கு ‘பொம்மை’ என தலைப்பிட்டுள்ளதாக நாம் முன்பே அறிவித்திருந்தோம். இந்நிலையில் இப்படத்தில் சாந்தினி தமிழரசன் இணைந்துள்ளார்.சாந்தினியின் படங்கள் வரிசையில் இந்தப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும் என்கிறார்கள்.