''எதுவும் பண்ண முடியல'' - கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து நடிகை அனுஷ்கா உருக்கம்
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா வைரஸினால் தமிழகத்தில் நேற்று(ஏப்ரல்07) ஒருநாள் மட்டும் 69 பேர் கொரரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளது. மற்ற மாநிலங்களிலும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நடிகை அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், ''வாழ்க்கையில் நாம் கற்றுக்கொண்டதையயெல்லாம் மறந்து, முற்றிலும் புதிதாக கற்றுக்கொண்டிருக்கிறோம். நாம் இதுவரை செய்ய முடியாது என்று நினைத்ததை எல்லாம் இப்பொழுது செய்துகொண்டிருக்கிறோம். நம்மால் இயன்றதை இப்பொழுது செய்ய முடியாத நிலை.
நாம் சற்று இளைப்பாறும் நேரத்தில் நாம் காலத்தால், புவியியல் ரீதியான தடைகள் இருந்தாலும் நாம் ஒன்றாக நிற்கிறோம். நம்மை பாதுகாக்க, நம்மை கவனித்துக்கொள்ள பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது.
இந்த பிரச்சனைகளில் இருந்து வெளியில் வரும்போது எல்லோருக்கும் ஒரு கதாப்பாத்திரம் இருக்கிறது செய்வதற்கு. சிறியதோ பெரியதோ அந்த கதாப்பாத்திரத்தை மனிதனாக மனிதத்தன்மையுடன் செய்வோம்'' என்று தெரிவித்துள்ளார்.