www.garudabazaar.com

அதீதி ராவ் - துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படம்! வெளியான Colourful First Look Poster!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ், தெலுங்கு,மலையாளம், இந்தி  உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆந்திராவை சார்ந்த நடிகை அதிதீ ராவ் ஹைத்ரி.

actress Aditi Rao Hyderi Hey Sinamika movie first look released

தமிழில் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய காற்ரு வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களிலும், மிஷ்கின் இயக்கிய சைக்கோ படத்திலும் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் மூன்று தேசிய விருதுகளை வென்ற சிருங்காரம் என்ற தமிழ் படத்தில் அறிமுகமனவர் என்பது பலருக்கு தெரியாத ஒரு தகவலாகும்.

actress Aditi Rao Hyderi Hey Sinamika movie first look released

துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதீதி ராவ் நடிக்கும் புதிய படமான ஹே சினாமிகா படத்தின்  அதிதீ ராவ் கதாபாத்திரத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. மோனா எனும் கதாபாத்திரத்தில் அதீதி ராவ் நடிக்கிறார். ஹீரோவாக துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் 'ஹே சினாமிகா' படத்தை நடன இயக்குனர் பிருந்தா இயக்குகிறார். இது இவருக்கு அறிமுக படமாகும், துல்கர் சல்மானின் 33வது படமாக இந்த படம் உருவாகி உள்ளது. ஏற்கனவே 'ஹே சினாமிகா' படத்தின் காஜல் அகர்வால் கதாபாத்திரத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. மலர் விழி எனும் கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார்.

actress Aditi Rao Hyderi Hey Sinamika movie first look released

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் (21.12.2021) அன்று வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் லுக் போஸ்டரை நஸ்ரியா - பகத் பாசில், சூர்யா - ஜோதிகா, ராணா டகுபடி ஆகியோர் வெளியிட்டனர். யாழன் எனும் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் RJ-வாக நடிக்கிறார். இந்த படத்திற்கு 96 படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்க JIO ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

actress Aditi Rao Hyderi Hey Sinamika movie first look released

இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. சேட்டிலைட் உரிமையை கலர்ஸ் டிவி கைப்பற்றி உள்ளது. மேலும் ஒடிடி உரிமையான டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்த படத்திற்கு ப்ரீத்தி ஜெயராமன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். கார்க்கி கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். ராதா ஸ்ரீதர் எடிட்டராக பணியாற்றுகிறார். இந்த படம் வரும் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 நாள் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

actress Aditi Rao Hyderi Hey Sinamika movie first look released

People looking for online information on Aditi Rao Hydri, Dulquer Salman, Hey Sinamika, Kajal Agarwal, Maniratnam will find this news story useful.