Fakir Other Banner USA
www.garudabazaar.com

‘ஆனா இத என்னைக்குமே நாங்க வெளிய சொன்னதில்ல..’- என் தங்கச்சியாச்சே! கெத்து காட்டும் கார்த்தி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஜோதிகா நடித்துள்ள ‘ராட்சசி’ திரைப்படத்தில், சூர்யாவின் தங்கை பிருந்தா பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

Karthi appreciates his sister Brindha Sivakumar for sung a powerful song in Jyothika's Raatchasi

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள ‘ராட்சசி’ திரைப்படத்தை கவுதம் ராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பழம்பெரும் நடிகர் சிவக்குமாரின் மகளும், நடிகர்கள் சூர்யா, கார்த்தியின் தங்கையுமான பிருந்தா சிவக்குமார் ஒரு பாடல் பாடியுள்ளார். ஷான் ரோல்டன் இசையில் யுகபாரதி எழுதியுள்ள ‘நீ என் நண்பனே’ என்ற பாடலை பிருந்தா சிவக்குமார் பாடியுள்ளார்.

இந்நிலையில், பாடகியான தனது தங்கை பற்றி பெருமையான போஸ்ட் ஒன்றை நடிகர் கார்த்தி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவரது ட்வீட்டில், நாம எப்பவுமே தங்கச்சிங்கள புகழ்ந்ததே கிடையாது. ஆனா நம்மல பெருமைப்படுத்துறப்போ அவங்கள கொண்டாடுற மாதிரியான தருணம் வரும். அப்படி ஒரு தருணம் இது. பாடகி - பிருந்தா சிவக்குமார்’ என ட்வீட் செய்து தனது அண்ணி நடித்த ‘ராட்சசி’ படத்தில் பாடலை கார்த்தி பகிர்ந்துள்ளார்.

ஏற்கனவே கவுதம் கார்த்திக், கார்த்திக் நடிப்பில் வெளியான ‘மிஸ்டர் சந்திரமௌலி’ திரைப்படத்தின் டைட்டில் டிராக் பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

‘ஆனா இத என்னைக்குமே நாங்க வெளிய சொன்னதில்ல..’- என் தங்கச்சியாச்சே! கெத்து காட்டும் கார்த்தி வீடியோ