அடப் பாவிங்களா! அனிருத்தையும் விட்டு வைக்கலியா: ட்ரெண்ட் ஆகும் புதிய வீடியோ!
முகப்பு > சினிமா செய்திகள்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் 'மாஸ்டர்'. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் முதல் சிங்கிள் "குட்டி ஸ்டோரி" வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டாம் சிங்கிள் 'வாத்தி கம்மிங்' வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது.

இந்தப் பாடலில் நடிகர் விஜய் ஆடும் ஸ்டெப் செம வைரல் ஆகியுள்ளது. 6 முதல் 60 வரை இந்த பாடலுக்கு டிக்டாக்கில் ஸ்டெப் போட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார்.
அந்த வீடியோவில் 'வாத்தி கம்மிங்' பாடலில் அனிருத் ஆடும் பகுதியை சிலர் ட்ரோல் செய்துள்ளனர். அதுவும் விவேக் டயலாக்குகளை கொண்டு அதை உருவாக்கியுள்ளனர். இந்த வீடியோவை ஷேர் செய்த விவேக், அதற்கு மேல் "அடப் பாவிங்களா! அனிருத்தையும் விட்டு வைக்கலியா" என்று காமெடியாக கூறியுள்ளார்.
அடப் பாவிங்களா! அனிருத்தையும் விட்டு வைக்கலியா! But semma imagination; semma sync!! 😀😀😀😀😀 https://t.co/CWcf5rcTH3
— Vivekh actor (@Actor_Vivek) March 12, 2020