அடடே.. Thalapathy66 ஷூட்டிங்கல சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரா.?… அவரே பகிர்ந்த லேட்டஸ்ட் pic!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

Sarathkumar confirmed participating in thalapathy 66 shooting

தளபதி 66…

பீஸ்ட் திரைப்படத்துக்குப் பிறகு ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் இந்த படம் ஆக்ஷனுக்கு நிகராக குடும்ப செண்ட்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. வம்சி இந்த படத்தை இயக்குகிறார்.

Sarathkumar confirmed participating in thalapathy 66 shooting

கவனம் ஈர்த்த பூஜை…

கடந்த மாதம் இந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ, ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் கலந்து கொண்டனர். இந்த பூஜையில் நடிகர் சரத்குமாரும் கலந்து கொண்டுள்ளார். இந்த படத்தில் விஜய் உடன் முதல்முறையாக இணைந்து நடிக்க உள்ளார். இந்த படத்தில் எடிட்டராக பிரவீன் கே எல் இணைந்துள்ளார். விஜய்யின் பைரவா படத்தின் எடிட்டரும் இவர் தான். வமசியின் சில படங்களில் எடிட்டராகவும் பணியாற்றி உள்ளார். தமன் முதல் முறையாக விஜய் படத்துக்கு இசையமைக்கிறார்.  நடிகர் ஷாம் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Sarathkumar confirmed participating in thalapathy 66 shooting

ஐதராபாத்தில் shooting…

சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து நிறைவடைந்த நிலையில் தற்போது  இந்த படத்தின் படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத்தில் நேற்று  (04.05.2022) துவங்கி உள்ளது. இதற்காக விஜய் ஐதராபாத் சென்றுள்ளார். அங்கு விமான நிலையத்தில் விஜய் இருந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

சரத்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படம்…

இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சரத்குமார் இப்போது பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. ஹைதராபாத்தில் ஹோட்டல் ஜிம்மில் இருக்கும் சரத்குமார் “கொரோனா பாதிப்பு, காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பின்னர் இப்போது ஐதராபாத்தில் உள்ள ஒரு ஹோட்டல் ஜிம்முக்கு வந்துள்ளேன். தளபதி 66 படத்துக்கான படப்பிடிப்பு” எனக் கூறியுள்ளார்.

Sarathkumar confirmed participating in thalapathy 66 shooting

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

அடடே.. THALAPATHY66 ஷூட்டிங்கல சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரா.?… அவரே பகிர்ந்த லேட்டஸ்ட் PIC! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sarathkumar confirmed participating in thalapathy 66 shooting

People looking for online information on Rashmika, Sarathkumar, Thalapathy 66, Vamsi will find this news story useful.