www.garudabazaar.com

'எதற்காக இந்த புது Getup ?' - விஜய் சேதுபதி அதிரடி பதில் - நீங்களே பாருங்க !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தை காண ரசிகர்களிடையே ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. படம் நிச்சயமாக தியேட்டரில் தான் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Actor Vijay Sethupathi clarifies about his new get up | தனது புதுத் தோற்றம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்

மேலும் பிரபல இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள 'லாபம்' படத்தின் டிரெய்லர் நாளை (22/08/2020) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடிக்க,  இமான் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Actor Vijay Sethupathi clarifies about his new get up | தனது புதுத் தோற்றம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்

இந்நிலையில் விஜய் சேதுபதியின் நீண்ட தாடியுடன் இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வைரலானது. இந்நிலையில் நிகழ்வு ஒன்றில் விஜய் சேதுபதி கலந்து கொண்ட போது, இந்த புது கெட்டப் அடுத்த படத்துக்காகவா என நிரூபர் கேட்டபோது பதிலளித்த விஜய் சேதுபதி, ''லாக்டவுனா இருக்குறதுனால டை அடிக்க வேண்டாம்னு விட்டுட்டேன் சார்.

மூஞ்சி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டுமே. பூமியோட குணம் ஒன்னு இருக்கு சார். ஒரு புல் தரை இருக்கு. அதுல நடந்துட்டே இருந்தா பாதை வந்துடும். நடக்கமா விட்டிங்கனா திரும்ப புல் மொளச்சுடும். recover ஆகும் தன்மை பூமியை போல மனுசனுக்கு இருக்கு என நான் நம்புறேன்'' என்றார்.

'எதற்காக இந்த புது GETUP ?' - விஜய் சேதுபதி அதிரடி பதில் - நீங்களே பாருங்க ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actor Vijay Sethupathi clarifies about his new get up | தனது புதுத் தோற்றம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்

People looking for online information on Vijay Sethupathi will find this news story useful.