www.garudabazaar.com

நானும் ரவுடிதான் லோகேஷ்.. சர்ஜரிக்கு பின் முதல் பேட்டி. - ''கதை முடிஞ்சுதுன்னு நினைச்சேன்.!"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காமெடி நடிகர் லோகேஷ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு முதல் முறையாக அதுகுறித்து பேசியுள்ளார். 

சர்ஜரிக்கு பின் முதல் பேட்டி கொடுக்கும் லோகேஷ் | Vijay Sethupathi's Nanum Rowdy than actor VJ Lokesh Babu interview after Surgery

விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் உள்ளிட்டோர் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வெளியான திரைப்படம் நானும் ரவுடிதான். இத்திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தவர் லோகேஷ். மேலும் இவர் தொலைக்காட்சிகளிலும் தனது நகைச்சுவையால் பிரபலமானார். இதனிடையே கடந்த மார்ச் மாதம், பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் லோகேஷ். இதை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி அவரை நேரில் சந்தித்து மருத்துவ உதவிகளை வழங்கினார்.

சர்ஜரிக்கு பின் முதல் பேட்டி கொடுக்கும் லோகேஷ் | Vijay Sethupathi's Nanum Rowdy than actor VJ Lokesh Babu interview after Surgery

இந்நிலையில் தற்போது முதற்கட்ட சர்ஜரி முடிந்த அவர் வீடு திரும்பியுள்ளார். இதை தொடர்ந்து நம்மிடம், அவர் இந்த 6 மாத கால போராட்டத்தை பற்றி விரிவாக பேசினார். மேலும் தனக்கு விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து உதவிகள் கிடைத்ததாகவும், தான் ஷோ நடத்திய சன் டிவியும் உதவியதாக அவர் தெரிவித்தார். மேலும் விஷயமறிந்து நடிகை அம்பிகா அவரை தொடர்பு கொண்டு பேசியதாகவும் அவர் கூறினார். 

''விரைவில் முழுமையாக குணமாகி வந்து, பழைய படி மக்களை சிரிக்க வைக்கும் ஷோக்கள் செய்ய வேண்டும் என விரும்புகிறேன். இப்போது இரண்டாம் கட்ட சர்ஜரி செய்ய சொல்லி இருக்கிறார்கள். அதற்கு இன்னும்  5 லட்சம் தேவைப்படுகிறது. அதனால், முடிந்தவர்கள் எனக்கு உதவி செய்யுங்கள்.'' என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நடிகர் லோகேஷின் வங்கி கணக்கு விவரங்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

To help Lokesh for his surgery,  please donate

Account Holder No : N. Lokesh

City union bank ac no.. 036001001617289

IFSC code: CIUB0000036 (Mandaveli Branch)

Gpay Number - 9790793199

நானும் ரவுடிதான் லோகேஷ்.. சர்ஜரிக்கு பின் முதல் பேட்டி. - ''கதை முடிஞ்சுதுன்னு நினைச்சேன்.!" வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

சர்ஜரிக்கு பின் முதல் பேட்டி கொடுக்கும் லோகேஷ் | Vijay Sethupathi's Nanum Rowdy than actor VJ Lokesh Babu interview after Surgery

People looking for online information on Aditya TV Lokesh, Lokesh Babu, Naanum Rowdy Dhaan, Sivakarthikeyan, Vijay Sethupathi will find this news story useful.