www.garudabazaar.com
iTechUS

Vadivelu : பெரும் சோகம்.! நடிகர் வடிவேலு தாயார் உடல்நலக் குறைவால் மரணம்..!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு.

Actor Vadivelu Mother Passed away due to illness sources

Also Read | "இவங்களுக்குதான் Title கிடைக்கணும்" .. ஜிபி முத்துவிடம் தன் ஆசையை சொன்ன மைனா!!

இவரது காமெடிகள் காலங்கள் கடந்தும் ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படுகிறது. தற்போது நடிகர் வடிவேலு, மாமன்னன்,  சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அண்மையில் சுராஜ் இயக்கத்தில்  'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தில் 'வைகைப்புயல்' வடிவேலு நாயகனாக நடித்திருந்தார். 'டாக்டர்'  ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ் காந்த், லொள்ளு சபா சேஷு,இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் நடிகை சிவாங்கி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் வடிவேலுவுடன் நடித்திருந்தனர். 

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தினை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில்  ‘மாமன்னன்’ படத்திலும் வடிவேலு நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரப் பெயரும் மாமன்னன் என கூறப்படுகிறது. மாமன்னன் படத்தில் வடிவேலு அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பி.வாசு இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் சந்திரமுகி 2 படத்திலும் வடிவேலு, ராகவா லாரன்ஸ் மற்றும் ராதிகாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக நேற்றிரவு மரணமடைந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு வயது 87. மதுரை மாவட்டம் விரகணூரில் உள்ள வடிவேலு வீட்டில் இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் வடிவேலு அவர்களின் தாயார் அவர்கள் மறைவையொட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

"நடிகர் வடிவேலு அவர்களின் அன்புத்தாயார் அவர்கள் மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாதஇழப்பாகும். 'வைகைப் புயல்' திரு. வடிவேலு அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்". என தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Also Read | "விக்ரமன் True லயன், அசிம் ராக்கி பாய்".. Finale போனவங்கள பத்தி ஒரு வார்த்தையில் சொன்ன ADK!!

தொடர்புடைய இணைப்புகள்

Actor Vadivelu Mother Passed away due to illness sources

People looking for online information on Vadivelu, Vadivelu Mother Passed away will find this news story useful.