www.garudabazaar.com
iTechUS

"விக்ரமன் True லயன், அசிம் ராக்கி பாய்".. Finale போனவங்கள பத்தி ஒரு வார்த்தையில் சொன்ன ADK!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த வீட்டிற்குள் பல சண்டை, சச்சரவுகள், எமோஷனலான தருணங்கள் என நிறைய பார்த்து விட்டது.

ADK about bigg boss finalists in single words exclusive

இவை அனைத்தையும் கடந்து 21 போட்டியாளர்கள் இருந்த வீட்டில் தற்போது ஷிவின், விக்ரமன், அசிம், அமுதவாணன் மற்றும் மைனா நந்தினி ஆகிய 5 பேர் Finale ரவுண்டில் முன்னேறி உள்ளனர்.

முன்னதாக, பிக் பாஸ் Finale சுற்றுக்கு முன்னேறுவதற்கு முன்பாக பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகி இருந்தார் ADK. சிறந்த போட்டியாளராக பிக் பாஸ் வீட்டில் வலம் வந்த ஏடிகேவின் பாடல்களுக்கு பிரத்யேக ரசிகர்களே உள்ளனர். பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சூழ்நிலைகள் குறித்தும், போட்டியாளர்கள் குறித்தும் ஸ்பாட்டில் நிறைய பாடல்களை அவர் பாடி உள்ளார்.

அதே போல, சிறப்பாகவும் ஆடி வந்த ஏடிகே, Finale வாரத்திற்கு முன் வெளியேறி இருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று வேதனையை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து, சில ட்வீட்களை செய்திருந்த ஏடிகே, லைவில் தோன்றி பிக் பாஸ் குறித்தும், அசிம், விக்ரமன் உள்ளிட்ட போட்டியாளர்கள் குறித்தும் நிறைய கருத்துக்களை பேசி இருந்தார்.

ADK about bigg boss finalists in single words exclusive

இந்த நிலையில், சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்த ADK, Behindwoods நேயர்களுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதில் தனது பிக் பாஸ் அனுபவம் குறித்தும், விக்ரமன், அசிம் உள்ளிட்ட போட்டியாளர்கள் குறித்தும் பல சுவாரஸ்ய தகவல்களை ADK பகிர்ந்து கொண்டார். அதே போல கமல்ஹாசன் அளித்த தொப்பி குறித்தும் நெகிழ்ச்சியாக சில கருத்துக்களை பேசி இருந்தார்.

ADK about bigg boss finalists in single words exclusive

இந்த நிலையில், உள்ளே இருக்கும் ஐந்து போட்டியாளர்கள் குறித்தும் ஒரே வார்த்தையில் சில பெயர்களையும் ADK குறிப்பிட்டுள்ளார். "விக்ரமன் - True லயன், அசிம் - ராக்கி பாய், மைனா - க்யூட் காமெடியன், அமுதவாணன் - Tremendous Talent, ஷிவின் - Genuine ஹியூமன் பீயிங்" என கூறி இருந்தார். அதே போல, விக்ரமன் பிக் பாஸ் டைட்டில் வெற்றி பெற வேண்டும் என தான் விரும்புவதாகவும், அப்படி இல்லாமல் யார் ஜெயித்தாலும் தனக்கு சந்தோசம் தான் என்றும் ADK கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

"விக்ரமன் TRUE லயன், அசிம் ராக்கி பாய்".. FINALE போனவங்கள பத்தி ஒரு வார்த்தையில் சொன்ன ADK!! வீடியோ

Tags : ADK, Azeem, Vikraman

தொடர்புடைய இணைப்புகள்

ADK about bigg boss finalists in single words exclusive

People looking for online information on ADK, Azeem, Vikraman will find this news story useful.