www.garudabazaar.com

"போடு.. தெறிக்கவிடும் காம்போ.." பிரபல சைக்கோ த்ரில்லர் பட இயக்குனருடன் கைகோர்க்கும் சூர்யா..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தன்னுடைய அடுத்த படத்தில், சூர்யாவுடன் இணையவிருக்கும் இயக்குனர் குறித்து அசத்தல் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

actor surya to join hands with popular psycho thriller director

"விஜய் சார் பையன் என்னோட தீவிர ரசிகன்.." யுவன் பகிர்ந்த சீக்ரெட்.. விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக, 'ஜெய் பீம்' திரைப்படம் 2021 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. அதற்கு முன்பாக, 'சூரரைப் போற்று' திரைப்படம், 2020 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது

இந்த இரண்டு திரைப்படங்களும், ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்த நிலையில், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.

எதற்கும் துணிந்தவன்

அது மட்டுமில்லாமல், இரண்டு திரைப்படங்களும், சர்வதேச அரங்கில் விருதுகளையும் வென்று  குவித்திருந்தது. கிட்டத்தட்ட சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, சூர்யா நடிப்பில் 'எதற்கும் துணிந்தவன்' என்ற திரைப்படம், தியேட்டரில் ரிலீஸ் ஆகப் போகிறது.

actor surya to join hands with popular psycho thriller director

நட்சத்திர பட்டாளம்

பாண்டியராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படம், மார்ச் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், இவர்களுடன் வினய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி உள்ளிட்ட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

டிரைலர் ரிலீஸ்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர், நாளை (மார்ச் 02) வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், முற்றிலும் கிராமத்து பின்னணியில், சூர்யா நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அதே எதிர்பார்ப்பில் டிரைலருக்காகவும் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

அசத்தல் தகவல்

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தினை தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்திலும், இயக்குனர்கள் பாலா மற்றும் சிவா ஆகியோர் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சூர்யாவின் அடுத்த திரைப்படத்தினை, பிரபல இயக்குனர் இயக்கவுள்ளதாக அசத்தல் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

actor surya to join hands with popular psycho thriller director

ராம்குமார் - சூர்யா

'முண்டாசுப்பட்டி', 'ராட்சசன்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராம்குமார், சூர்யாவுடன் கைகோர்க்கவுள்ளதாகவும், இந்த படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முண்டாசுப்பட்டி திரைப்படம், காமெடி எண்டர்டெயினராக அமைந்திருந்த நிலையில், 'ராட்சசன்' திரைப்படத்தை, அப்படியே நேர் எதிராக சைக்கோ க்ரைம் த்ரில்லர் வகையில் உருவாகியிருக்கியிருந்தார் இயக்குனர் ராம்குமார். இரண்டு படங்களும் ,மிகப் பெரிய அளவில், ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருந்தது.

க்ரைம் த்ரில்லர்

அதிலும் குறிப்பாக, ராட்சசன் திரைப்படம், தமிழில் வெளிவந்த சிறந்த க்ரைம் த்ரில்லர் என்ற பெயரையும் சம்பாதித்திருந்தது. இதனையடுத்து, ராம்குமார் - சூர்யா காம்போ விரைவில் சேரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், எந்த மாதிரி ஜானர் கதையம்சமாக இந்த திரைப்படம் அமையும் என்ற எதிர்பார்ப்பு, தற்போது ரசிகர்கள் மத்தியல் துளிர் விட ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

"கொஞ்சம் நாகரீகமா பேசுங்க.." ப்ளூ சட்டை மாறனின் வலிமை விமர்சனம்.. சார்பட்டா நடிகர் அறிக்கை

தொடர்புடைய இணைப்புகள்

actor surya to join hands with popular psycho thriller director

People looking for online information on Actor surya, சூர்யா, சைக்கோ த்ரில்லர் பட இயக்குனர், ஜெய் பீம், Psycho thriller director, Surya new movie will find this news story useful.