www.garudabazaar.com

மகள்களை கொண்டு நிலத்தை உழுத விவசாயி.! - நெகிழ வைக்கும் பிரபல நடிகரின் உதவி.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

 

விவசாயிக்கு சோனு சூட் செய்த உதவி | actor sonu sood helps a farmer who plough land with his daughters

மகள்களை வைத்து நிலத்தை உழுது வைரலான விவசாயிக்கு பிரபல நடிகர் உதவி செய்துள்ளார்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சோனு சூட். இவர் தமிழில் சந்திரமுகி, அருந்ததி, ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் இவர் பிரபுதேவா, தமன்னா நடித்த தேவி திரைப்படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதனிடையே சோனு சூட் தொடர்ந்து அவரால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார்.

விவசாயிக்கு சோனு சூட் செய்த உதவி | actor sonu sood helps a farmer who plough land with his daughters

இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் நிலத்தை உழுவதற்கு மாடுகள் இன்றி தனது மகள்களை வைத்து விவசாயி ஒருவர் நிலத்தை உழும் வீடியோ இணையத்தில்  வைரலானது. இதையடுத்து இந்த வீடியோவை பார்த்த சோனு சூட், ''இந்த குடும்பத்திற்கு மாடுகளை விட ட்ராக்டரை கொடுப்பதுதான் சரி. அதனால் நான் அவர்களுக்கு ஒரு ட்ராக்டர் வாங்கி தரவுள்ளேன். இன்று மாலை அவரின் நிலத்தை ட்ராக்டர் உழுது கொண்டிருக்கும்'' என தெரிவித்துள்ளார். சோனு சூட்டின் இந்த உதவி ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

விவசாயிக்கு சோனு சூட் செய்த உதவி | actor sonu sood helps a farmer who plough land with his daughters

People looking for online information on Farmer, Sonu Sood, Tractor will find this news story useful.