'இது நமக்கு ஒரு வொர்க் அவுட்.. ஆனா, அவங்களுக்கு இதுதான்..' - நடிகர் கதிரின் சூப்பர் போட்டோ.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் கதிர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது வொர்க் அவுட் போட்டோவுடன் சூப்பர் பதிவையும் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக கலக்கி வருபவர் கதிர். வித்தியாசமான கதைக்களங்களை இவர் தேர்ந்தேடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நடித்த கிருமி, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பரியேறும் பெருமாள் படத்தில் இவரது நடிப்புக்காக விருதுகளும் கிடைத்தது.
இந்நிலையில் நடிகர் கதிர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். மண்வெட்டியை வைத்து மண் அள்ளிப்போடும் போட்டோவை பகிர்ந்துள்ள அவர், விவசாயிகளின் அன்றாட வேலைதான், சிட்டி வாழ்க்கையில் வொர்க் அவுட்டாம். என்ன சொல்றது போங்க...' எனவும் அவர் பதிவிட்டுள்ளார். கதிரின் இந்த பதிவு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இவர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் ஃபுட்பால் கோச்சாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
Farmers routine life has become a workout in city lifestyle.. Enna solradhu ponga🙆🏻♂️#crossfit pic.twitter.com/FFAADegyOL
— kathir (@am_kathir) May 20, 2020