www.garudabazaar.com

அட.. சிம்புவிடம் இருந்து இப்படி ஒரு சர்ப்ரைஸ்-ஆ..?!! - செம உற்சாகத்தில் ரசிகர்கள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிம்புவை பற்றி வந்துள்ள புதிய தகவல், ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. 

சமூக வலைதளங்களில் சிம்பு | Maanaadu actor simbu's new surprise plan fans celeberate

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. சிறுவயதில் இருந்தே நடித்து வரும் இவர், பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தின் நடித்து வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநாடு ஷூட்டிங், விரைவில் தொடங்கவுள்ளது. இதனிடையே தற்போது சிம்பு அவரது சொந்த தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

சமூக வலைதளங்களில் சிம்பு | Maanaadu actor simbu's new surprise plan fans celeberate

இந்நிலையில் நடிகர் சிம்புவை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இப்போது தெரிய வந்துள்ளது. வருகிற அக்டோபர் 22-ஆம் தேதி, காலை 9.09 மணிக்கு, சிம்பு சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளாராம். ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களிலும், யூடியூப்பிலும் அவர்  வரும் வியாழன் முதல் களமிறங்கவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

சமூக வலைதளங்களில் சிம்பு | Maanaadu actor simbu's new surprise plan fans celeberate

People looking for online information on Simbu, Str, Suseenthiran will find this news story useful.