www.garudabazaar.com

"நீங்க இல்லாம நான் இல்ல".. Fans-க்கு சர்ப்ரைஸ் வீடியோ வெளியிட்ட 'பத்துதல' சிம்பு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் சிம்பு வெளியிட்ட வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Actor simbhu thanking his fans in a video goes viral

Images are subject to © copyright to their respective owners.

Also Read | 70 வயதில் பீமரதசாந்தி திருமண பூஜையில் குடும்பத்துடன் நடிகர் செந்தில்..! வைரல் புகைப்படங்கள்..    

பத்து தல

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்துள்ளார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது.

இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.

Actor simbhu thanking his fans in a video goes viral

Images are subject to © copyright to their respective owners.

பத்து தல படத்தின்   படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ஐத்ராபாத், விசாகப்பட்டினம், , கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி, துங்கபத்திரை அணை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கோவிலூர்,கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் நடந்து நிறைவடைந்தது. தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நாளை மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பத்து தல படத்தின் டீஸர், பாடல்கள் & டிரெய்லர்  வெளியானது.  சமீபத்தில் பத்து தல படத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், இயக்குனர் கிருஷ்ணா, இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Actor simbhu thanking his fans in a video goes viral

Images are subject to © copyright to their respective owners.

வீடியோ

இந்த சூழ்நிலையில் நடிகர் சிம்பு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில்,"எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல. கண்டிப்பா தியேட்டர்ல வந்து படத்தை பார்த்து என்ஜாய் பண்ணுங்க. படம் நல்லா வந்திருக்கு. கிருஷ்ணா ரொம்ப நல்லா டைரக்ட் பண்ணிருக்காரு. ரஹ்மான் சார் மியூசிக் பத்தி நான் சொல்லவே வேண்டியதில்லை. நீங்களே பாடல்களை கேட்டிருப்பீங்க. நல்ல ரெஸ்பான்ஸ் கொடுத்திருக்கீங்க. இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமா அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்குறேன். உங்களுடைய அன்பும் ஆதரவும் கண்டிப்பா எனக்கு தேவை. லவ் யூ ஆல். நீங்க இல்லாம நான் இல்ல" எனக் குறிப்பிட்டுளளார்.

Also Read | ரிலீஸ்க்கு முன்பே 'பத்து தல' படம் பார்த்த டி. ராஜேந்தர்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க!

தொடர்புடைய இணைப்புகள்

Actor simbhu thanking his fans in a video goes viral

People looking for online information on Pathu Thala, Simbu will find this news story useful.