www.garudabazaar.com

ஷாந்தனுவின் அடுத்தபட டைட்டில் லுக் வெளியானது.! - 'இது அப்பாவின் ட்ரேட்மார்க் சமாச்சாரமாச்சே.!'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஷாந்தனு நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. 

ஷாந்தனு நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது | actor shanthnu athulya's next film first look is here

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக கலக்கி வருபவர் ஷாந்தனு. இயக்குநர் கே.பாக்யராஜின் மகனான இவர், தற்போது விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அண்மையில் இவர் நடித்து வெளியான ஒரு சான்ஸ் கொடு வீடியோ பாடல் சூப்பர் ஹிட் அடித்தது. 

இந்நிலையில் ஷாந்தனு நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது. லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில், ரவிந்தர் சந்திரசேகரன் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு முருங்கைக்காய் சிப்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. ஶ்ரீஜர் இயக்கும் இத்திரைப்படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, மனோபாலா, மதுமிதா, ரேஷ்மா நடிக்கும் இப்படத்திற்கு தரண் இசையமைக்கிறார். இதையடுத்து இணையத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தனது அப்பா பாக்யராஜின் ட்ரேட்மார்க் காமெடியான முருங்கைக்காய் எனும் டைட்டிலை வைத்துள்ளது குறித்து, ''இந்த சமாச்சாரம் செம ஃபன்னாக இருக்க போகிறது'' என பதிவிட்டுள்ளார் ஷாந்தனு. 

 

தொடர்புடைய செய்திகள்

ஷாந்தனு நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது | actor shanthnu athulya's next film first look is here

People looking for online information on Athulya Ravi, Bhagyaraj, Murungaikkai Chips, Ravindar Chandrasekaran, Shanthanu Bhagyaraj will find this news story useful.