www.garudabazaar.com

"வா தலைவா..".. செந்தில் நடிக்கும் பிரபல இயக்குநரின் அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்! .. Viral Photo!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நகைச்சுவை நட்சத்திரங்களில் மறக்க முடியாத மற்றும் தவிர்க்கமுடியாத ஒரு நடிகர் செந்தில்.

actor senthil oru kidaayin karunai manu directors next flick

ஆரம்பகாலங்களில் தனித்தும், பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியுடன் இணைந்தும் நகைச்சுவை காட்சிகளில் நடித்த செந்தில், நிச்சயமாக தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் முக்கியமான ஒருவர். பிற்காலத்தில் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், குணச்சித்திர நடிகராகவும் நடித்திருக்கும் செந்தில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்திருக்கிறார்.

செந்தில் பேசிய காமெடி கவுண்டர்களும் சரி, செந்தில் நடித்த நகைச்சுவைக் காட்சிகளும் சரி, இன்றும் மீம்ஸ் டெம்ப்ளேட்களில் வலம் வருவதை பார்க்க முடிகிறது. சிரிப்பு உலகத்தில் கல்வெட்டுக்களில் செந்திலின் சில நகைச்சுவை காட்சிகள் மற்றும் வசனங்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றன.

இந்நிலையில்தான் நடிகர் செந்தில் நடிக்கும் புதிய திரைப்படத்தை பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. ஆம், ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தை இயக்கிய திரைப்பட இயக்குனரின் அடுத்த படத்தில் செந்தில் நடிக்கும் தகவல் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

விதார்த், ரவீனா ரவி நடிப்பில் உருவாக்கி கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்ற திரைப்படம் ‘ஒரு கிடாயின் கருணை மனு’. சுரேஷ் செங்கையா இயக்கியிருந்த இந்த திரைப்படத்தை ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில்தான் ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படத்தின் இயக்குனர் சுரேஷ் செங்கையா இயக்கும் அடுத்த திரைப்படத்தில் செந்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் டப்பிங் பணிகளில் நடிகர் செந்தில் பேசி முடித்திருக்கிறார். இந்த பணிகளின்போது சூப்பர் டாக்கீஸ் சமீர் பரத் ராமுடன் இணைந்து நடிகர் செந்தில் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சூப்பர் டாக்கீஸ் இந்த திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தொடர்பான விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

Also Read: அப்படி போடு!!.. BiggBoss Set-ல GP முத்துவா? .. இணையத்தில் trend ஆகும் ‘செம்ம’ Viral ஃபோட்டோ!

actor senthil oru kidaayin karunai manu directors next flick

People looking for online information on Oru Kidayin Karunai Manu, Senthil will find this news story useful.