அந்த இன்னொரு வாழப்பழம் எங்க? செந்திலுடன் மல்லுக்கட்டிய வெளிநாட்டு அழகியின் வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பல தலைமுறைகளாக தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் செந்தில். தற்போது காமெடி சானல்களில் ஒளிபரப்பாகும் காமெடிகளில் பெரும்பாலனவை அவர் நடித்தது.

Comedian Senthil Karagattakaran vaazhaipazha comedy in tiktok

நடிகர் செந்தில் தனது அப்பாவித்தனமான செயல்பாடுகளால் எதாவது குழப்பம் ஏற்படுத்தி கவுண்டமணியிடம் வகையாக மாட்டிக் கொண்டு நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்து விடுவார். கவுண்டர் கொடுத்த டோஸ்களையும்,  இந்த இருவரின் லூட்டிகளையும் யாராலும் மறக்க முடியாது.  

பெட்ரோமாஸ் லைட் காமெடி, வாழைப்பழ காமெடி என வாழ்நாளுக்கும் நமக்கு அளித்திருக்கும் கொடை எண்ணிலடங்காதவை. இந்நிலையில் நடிகர் செந்தில் மற்றும் கவுண்டமணியின் புகழ்ப்பெற்ற வாழைப்பழ காமெடியை டிக்டாக்கில் ஒரு வெளிநாட்டு ரசிகை வெளியிட்டுள்ளார்.

1989-ம் ஆண்டு வெளியான கரகாட்டக்காரன் படத்தில் இஅம்பெற்ற க்ளாசிக் நகைச்சுவை காட்சியான இந்த வாழைப்பழ காமெடி தமிழ் சினிமாவில் நிரந்திரமான புகழ் பெற்றுள்ளது. ஒவ்வொரு முறையும் இது ஏதாவது ஒரு ரூபத்தில் வெளியாகும்போது மீண்டும் அனைவராலும் ரசிக்கப்பட்டுவருகிறது.

இப்படம் வெளியாகி முப்பதாண்டுகள் கடந்த நிலையிலும் இன்றும் உலகின் ஏதோ ஒரு கோடியில் ஒரு ரசிகரால் கொண்டாடப்படுகிறது என்பதற்கு சாட்சிதான் இந்த வீடியோ

 

தொடர்புடைய இணைப்புகள்

Comedian Senthil Karagattakaran vaazhaipazha comedy in tiktok

People looking for online information on Goundamani, Lockdown, Senthil, Tiktok will find this news story useful.