என் வீட்டு வாட்ச்மேன்.. வேலம்மாள் ஸ்கூலில் டீச்சர்..! சதீஷ் பகிர்ந்த சக்சஸ் ஸ்டோரி.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், அவரது வீட்டு செக்யூரிட்டியின் இன்ஸ்பிரேஷனல் கதையை பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் காமெடியனாக கலக்கி வருபவர் சதீஷ். இவர் நடித்த எதிர்நீச்சல், தமிழ்ப்படம் உள்ளிட்ட படங்கள் இவருக்கு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இதையடுத்து இவர் விஜய்யுடன் சேர்ந்து கத்தி, பைரவா உள்ளிட்ட படங்களில் தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இவரது வீட்டில் செக்யூரிட்டியாக பணியாற்றிய பாலுசாமி என்பவர் தற்போது வேலம்மாள் பள்ளியில் தமிழ் ஆசியராக வேலை கிடைக்க பெற்றுள்ளாராம். மேலும் இந்த இன்ஸ்பிரேஷனல் விஷயத்தை சொல்லிய அவர், பாலுசாமியையும் தனது வீடியோவில் பேச வைத்திருக்கிறார். சதீஷின் இந்த பதிவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
நல்ல முன்னுதாரண மனிதர் 💪👏🙏🏻 நிச்சயமாக நல்ல மாணவர்களை உருவாக்குவார் 💪💪
Hats off #BaluSaami அய்யா #Real_Inspiration 🙏🏻🙏🏻🙏🏻
Thank u Mr #VeluMohan sir 🙏🏻 pic.twitter.com/Ooy5hjYiNf
— Sathish (@actorsathish) March 18, 2020