www.garudabazaar.com

''நாங்க பிரிஞ்சதுல பசங்களுக்கு நல்லது தான்...'' - நடிகை நளினி மகளுடன் சிறப்பு பேட்டி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் கதாநாயகி, வில்லி, குணச்சித்திர வேடம் என பல்வேறு பரிணாமங்களில் ஜொலித்தவர் நடிகை நளினி. நடிகர் ராமராஜனுடன் காதல், திருமணம், குழந்தை வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தன்‌ மகளுடன் இணைந்து Behindwoods TV-க்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.

Actress Nalini special interview about actor Ramarajan | நடிகர் ராமராஜனுடனான திருமணம் குறித்து நடிகை நளினி சிறப்பு பேட்டி

அப்போது ராமராஜனுடனான காதல் குறித்து பேசிய அவர், ''மிகவும் பிஸியாக நடிச்சிட்டு இருந்த நேரம். சாப்பிட்டாச்சா என்று கேட்க கூட யாரும் இல்ல. ஒரு படப்பிடிப்பின் போது உதவி இயக்குநராக இருந்த ராமராஜன் என்னிடம் சாப்பிட்டாச்சா என்று கேட்டார். அதுவே அவரை பிடிப்பதற்கு போதுமானதாக இருந்தது'' என்றார்.

நடிகர் ராமராஜனுடனான பிரிவு குறித்து பேசிய அவர், ''உடைந்ததை ஒட்ட‌ வைக்க முயற்சி பண்ணாலும் உடைந்தது உடைந்தது தான் இல்லையா ? நாங்க பிரிஞ்சது எங்க குழந்தைகளுக்கு நல்லது தானு தோணுச்சு. நான் இன்னும் அவரை நேசிக்கிறேன்'' என்றார். முழு வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

''நாங்க பிரிஞ்சதுல பசங்களுக்கு நல்லது தான்...'' - நடிகை நளினி மகளுடன் சிறப்பு பேட்டி வீடியோ

Actress Nalini special interview about actor Ramarajan | நடிகர் ராமராஜனுடனான திருமணம் குறித்து நடிகை நளினி சிறப்பு பேட்டி

People looking for online information on Nalini, Ramarajan will find this news story useful.