www.garudabazaar.com

Leena Nagwanshi : படிக்கும்போதே மாடலிங்... 22 வயது டிக் டாக் பிரபலம் லீனா நாகவன்ஷி திடீர் மரணம்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டிக் டாக் மூலம் பிரபலமானவர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த லீனா நாகவன்சி. இவர் தற்போது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

social media influencer leena nagwanshi, 22 dies in chhattisgarh

பிரபல பாலிவுட் நடிகை துனிஷா சர்மா அண்மையில் படப்பிடிப்பில் திடீரென மேக்கப் ரூமில் இருந்த போது விபரீத முடிவு எடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சட்டீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயதான  லீனா நாகவன்சி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தைச் சேர்ந்த லீனா நாகவன்சி அப்பகுதியில் பி.காம் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டு வருகிறார். படிப்பதற்காக வீட்டின் மொட்டை மாடிக்கு சென்ற அவர் நீண்ட நேரம் கழித்தும் வீட்டுக்குள் வராததால், அவருடைய தாயார் மாடிக்கு சென்று பார்த்தபோது அவர் அங்கு உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அதன் பின்னர் அக்கம் பக்கத்தினர் அவருடைய உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக உறுதி செய்தனர்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த லீனா நாகவன்சி, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்தார். முன்னதாக டிக் டாக் செய்து பிரபலமான இவர், அதில் கிடைத்த புகழை கொண்டு சில மியூசிக் வீடியோக்கள் மற்றும் குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். facebook மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் அவ்வப்போது பல போட்டோஷூட்களை பகிர்ந்துள்ள இவர், தற்போது எதற்காக உயிரை மாய்த்துக் கொண்டார் என்பது பலருக்கும் கேள்வியாக உள்ளது. இது தொடர்பாக சக்ரதர் ​​நகர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advisory : தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Also Read | நடுரோட்டில் நடிகை சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் பரபரப்பு ட்விஸ்ட்.. கணவர் கைது..!

social media influencer leena nagwanshi, 22 dies in chhattisgarh

People looking for online information on Leena Nagwanshi will find this news story useful.