www.garudabazaar.com

நடிகை மீரா மிதுன்.. புழல் சிறையில் இருந்து "ஜாமினில் ரிலீஸ்".. வெளியான பரபரப்பு Video!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மீரா மிதுன் சில நாட்களுக்கு முன்பாக கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பாக பரவி வருகிறது.

meera mithun releases from puzhal in bail viral video

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை மீரா மிதுன், சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மாடலிங் துறையில் இயங்கி வந்த இவர், சில நாட்களுக்கு முன்பாக தமிழ் திரைத் துறையில் இயக்குனர்கள் மற்றும் அவர்களின் சாதியை குறித்து அவதூறாக பேசிய சர்ச்சைக்குரிய கருத்து பெரிய அளவில் விவாதத்துக்கு உள்ளானது.

meera mithun releases from puzhal in bail viral video

பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், சிலர் மீரா மிதுனை கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்தனர். அதன்படி கலகத்தை தூண்டும் வகையிலான பேச்சு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், போலீசார் மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

meera mithun releases from puzhal in bail viral video

இதனைத்தொடர்ந்து கேரளாவில் சுற்றுலாவில் இருந்த மீரா மீதுனை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்த வீடியோக்களும் புகைப்படங்களும் அந்த நேரத்தில் வைரலாகின.

meera mithun releases from puzhal in bail viral video

முன்னதாக மீரா மிதுன், போலீசார் தம்மை கைது செய்தால் தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொள்வதாக பேசியிருந்தார். அந்த வீடியோவும் வலம் வந்தது.

meera mithun releases from puzhal in bail viral video

இதனைத் தொடர்ந்து மீரா மிதுன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் மீரா மிதுன் தொடர்ந்து ஜாமினுக்கு முயற்சி செய்து வந்திருந்த நிலையில் அவருக்கு தற்போது ஜாமின் கிடைத்து, புழல் சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறார். இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வருகின்றன.

நடிகை மீரா மிதுன்.. புழல் சிறையில் இருந்து "ஜாமினில் ரிலீஸ்".. வெளியான பரபரப்பு VIDEO! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

meera mithun releases from puzhal in bail viral video

People looking for online information on Biggbosstamil, Meera Mithun, Meera Mithun releases, Meera Mitun will find this news story useful.