www.garudabazaar.com

வைரலாகும் கமல்ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தின் BTS புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

vikram movie shooting spot BTS image went viral on social media

இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார்.

vikram movie shooting spot BTS image went viral on social media

சில தினங்களுக்கு முன்பு 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து படக்குழு படப்பிடிப்புக்கு காரைக்குடி சென்றது.அங்கு முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவுற்று தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

vikram movie shooting spot BTS image went viral on social media

இந்நிலையில் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு Behind The Scene (BTS) புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிறது. இந்த புகைப்படத்தில் பஹத் பாசிலுடன், விஜய் சேதுபதி இருக்கிறார். இவர்களுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். இந்த புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  

தொடர்புடைய இணைப்புகள்

vikram movie shooting spot BTS image went viral on social media

People looking for online information on Fahad Faasil, Kamal Haasan will find this news story useful.