‘கந்தவேலு வானவராயனை சந்தித்த வல்லவராயன்..’ - ஹாலிவுட் சென்ற தமிழ் ஹீரோவை வாழ்த்திய ரஜினி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பிரபல நடிகர் நெப்போலியன் சந்தித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Vallavarayan Napoleon meets Vanavarayan Super Star Rajinikanth for his hollywood debut Christmas Coupon

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தர்பார்’ திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். லைகா நிறுவனம்தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்தை பிரபல நடிகர் நெப்போலியன் சந்தித்துள்ளார்.

அரசியலில் இருந்து விலகிய பின் அமெரிக்காவில் செட்டிலாகியுள்ள நடிகர் நெப்போலியன், ஹாலிவுட் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

அதன்படி, கிரிஸ்டல் கிரீக் மீடியா, கைபா பிலிம்ஸ் தயாரிப்பில் டானியல் நட்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிகர் நெப்போலியன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஷீனா மோனின், ராபர்ட் லெனன், ஆரன் நோபிள் உள்ளிட்ட பல ஹாலிவுட் பிரபலங்கள் நடித்துள்ளனர். 

இந்த படம் விரைவில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் திரைக்கு வரவுள்ள நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுள்ளார். கடந்த 1993ம் ஆண்டு ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர்டூப்பர் ஹிட்டான ‘எஜமான்’ திரைப்படத்தில் நெப்போலியனும் ரஜினிகாந்தும் இணைந்து நடித்துள்ளனர்.

அந்த படத்தில் கந்தவேலு வானவராயன் ரோலில் நடித்திருந்த ரஜினியுடன் மோதும் வில்லன் கதாபாத்திரமான வல்லவராயன் ரோலில் நெப்போலியன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.