பாலிவுட்டில் 'த்ரிஷ்யம்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் நிஷிகண்ட் காமட். தமிழில் மாதவன் ஹீரோவாக நடித்த 'எவனோ ஒருவன்' படத்தை இயக்கி தமிழ் ரசிகர்களுக்கும் பரீட்சையமாகியுள்ளார். இயக்குநராக மட்டுமல்லாமல், நிஷிகண்ட் ஏராளமான படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
இயக்குநர் நிஷிகண்ட் காமட் சீரியஸான நிலையில் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மிகவும் சீரியஸான நிலையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்றுவருவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவர் இன்று (17/08/2020) இறந்து விட்டதாக வதந்தி பரவியது. இந்நிலையில் நடிகர் மிலாப் ஜாவேரி தனது ட்விட்டர் பக்கத்தில், நிஷிகண்ட் உடன் மருத்துவமனையில் இருக்கும் நபருடன் நான் பேசினேன். அவர் இன்னும் இறக்கவில்லை. அவர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். அவர் உயிருடன் தான் இருக்கிறார்'' என்று விளக்கமளித்துள்ளார்.
Just spoke to someone who is with Nishikant in the hospital right now. He hasn’t passed away yet. Yes he is v critical and fighting life and death. But he is still alive 🙏 https://t.co/h6D8fLA6N8
— Milap (@zmilap) August 17, 2020