VTK D Logo Top
www.garudabazaar.com

Amir Pavani : "உண்மையிலயே சேர்ந்து பயணிக்க போறாங்களே..".. அமீர் & பாவனியோட புது கார்.! வைரலாகும் ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்டவர்கள் அமீர் மற்றும் பாவனி.

bigg boss amir pavani bought new car together viral pic

விஜய் டிவி சின்னத்திரையில் நாயகியாக வலம் வந்த பாவனி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தன்னுடைய வாழ்க்கை குறித்து பகிர்ந்து கொண்டார். அதன்படி, கணவரை இழந்த பாவனி தன்னுடைய வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை வாழ்ந்து கொண்டிருப்பதாக பகிர்ந்து இருந்தார்.  இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி போட்டியாளராக விஜய் டிவி கோரியோகிராபராக இருந்த அமீர் உள்ளே வந்தார்.

bigg boss amir pavani bought new car together viral pic

பிறகு பாவனிடம் விளையாட்டாக ஆரம்பத்தில் பேசினாலும், பின்பு சீரியஸாக தன்னுடைய காதலை பாவனிக்கு சொல்ல தொடங்கினார். ஒரு வழியாக பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களை மையமாக வைத்து BB Jodigal நிகழ்ச்சி நடந்து வந்து கொண்டிருந்தது. அதன்படி BB Jodigal நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் டான்சராக பங்குபெற்ற அமீர் மற்றும் பாவனி இருவரும் டான்ஸ் பார்ட்னராக இணைந்து ஆடி வந்தனர்.

bigg boss amir pavani bought new car together viral pic

இந்நிலையில் அமீர் மற்றும் பாவனி இருவரும் இணைந்து ஒரு காரை வாங்கியுள்ளனர். ஆடி ரக காரான இந்த காருடன் அமீர், பாவனி மற்றும் அமீரின் மாணவி அலைனா ஆகியோர் நிற்கும் ஃபோட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தம்பதியரின் ரசிகர்களோ, இவர்களுக்கு வாழ்த்து சொல்லி வருவதுடன், ‘உண்மையிலேயே சேர்ந்து பயணிக்க போகிறீர்கள்.. செம்ம’ என்று கமெண்டில் கொடுத்துள்ளனர்.

bigg boss amir pavani bought new car together viral pic

அதாவது ஏற்கனவே BB ஜோடிகள் நிகழ்ச்சியின் 2வது சீசனில் நடனமாடி கோப்பையை வென்று முடித்த தருணத்தில் பாவனி, அமீருக்கு ப்ரொபோஸ் செய்திருந்தார். அதில், “நீங்கள் மிகச் சிறந்த மனிதர். மாஸ்டர். டான்ஸ் ஆடும் போது மிகவும் உறுதுணையானவர். நல்ல நண்பர் . எனவே நம்முடைய வாழ்க்கை பயணத்தை சேர்ந்து தொடங்கலாம். என்னுடைய வாழ்க்கையில் மிகச் சிறந்த இணையராக இருங்கள். அந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன். நீங்கள் எனக்காக எப்போதும் இருப்பீர்களா.? எப்போதும் ஐ லவ் யூ” என்று கூறியிருந்தார். இதுகுறித்துதான் ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். அதாவது வாழ்க்கையை போலவே, இருவரும் சொந்த காரில் சேர்ந்து பயணிக்க போகின்றனர் என்று வாழ்த்தி வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

bigg boss amir pavani bought new car together viral pic

People looking for online information on Amir Pavani trending, Amir Pavani Wedding, Pavani amir, Pavani amir love, Pavani Amir marriage will find this news story useful.