www.garudabazaar.com

"இந்த மாதிரி ஒண்ணாவது பண்ணிடனும்.. மகன் கிட்ட கத்துக்கணும்".. நடிகர் மாதவன் பகிர்ந்த வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மாதவன் தனது மகன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அதுபற்றி அவர் எழுதிய பதிவு பலரையும் புன்னகைக்க செய்திருக்கிறது.

Actor Madhavan funny post about his son exercise video goes viral

இந்திய திரை உலகில் பிரபல நடிகராக அறியப்படும் மாதவன் தமிழில் அலைபாயுதே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டாள் ஆகிய படங்களின் வாயிலாக தமிழகம் முழுவதும் திரை ரசிகர்களை ஈர்த்தார் மாதவன். தமிழ் மட்டுமல்லாது 3 இடியட்ஸ், ரங்தே பசந்தி உள்ளிட்ட இந்தி படங்களிலும் நடித்து புகழ்பெற்றார். இவர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களிலும் துடிப்பாக இயங்கிவருபவர்.

அண்மையில் இவரது இயக்கத்தில் வெளியான ராக்கெட்ரி திரைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழகமான இஸ்ரோவின் முன்னாள் ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணன் அவர்களது வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில் நம்பி கதாப்பாத்திரத்தில் மாதவன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவரது மகன் வேதாந்த் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றிருக்கிறார். கடந்த ஆண்டில் நடைபெற்ற லித்வியன் ஓபன் நீச்சல் போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்ற வேதாந்த், டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற டேனிஷ் நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.

தொடர்ந்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். அண்மையில் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்ற 48-வது ஜூனியர் நேஷனல் அக்வாடிக் சாம்பியன்ஷிப் போட்டியில், நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன் ஆண்களுக்கான குரூப் 1, 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் போட்டியில் தேசிய அளவிலான புதிய சாதனையை படைத்திருந்தார்.

இந்நிலையில், வேதாந்த் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இடுப்பில் வெயிட்டை கட்டிக்கொண்டு கம்பியில் தொங்கியபடி உடற்பயிற்சி செய்கிறார் வேதாந்த். இந்த வீடியோவை பகிர்ந்திருக்கும் மாதவன், அதில்,"இதுபோல ஒன்றையாவது விரைவில் செய்ய வேண்டும். கனவில் இதனை பயிற்சி செய்தது போதும். மகனிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டிய நேரம் இது" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by R. Madhavan (@actormaddy)

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Madhavan funny post about his son exercise video goes viral

People looking for online information on Actor Madhavan, Exercise, Vedanth will find this news story useful.