'நான் அஜித் சார்கிட்ட இதை கொண்டு போறேன்' - காமெடி நடிகர் கேட்ட உதவி.. பிரபல் ஹீரோ எடுத்த முடிவு.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தீப்பெட்டி கனேசன் வெளியிட்ட வீடியோவை கண்ட லாரன்ஸ் அவருக்கு உதவுவதாக பதிவிட்டுள்ளார். 

காமெடி நடிகருக்கு உதவ முன்வந்த லாரன்ஸ் | actor lawrence promises to help renigunta actor theepetti ganesan reaching ajith

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் ஹீரோவாகவும் இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவரின் காஞ்சனா படத்திற்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும் இவர் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார். சினிமா மட்டுமின்றி நலத்திட்ட உதவிகள் செய்வதிலும் இவர் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் ரெனிகுண்டா, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களில் நடித்த தீப்பெட்டி கனேசன் என்கிற கார்த்தி ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்டார். அஜித் சார் மட்டுமே தன்னை கார்த்திக் என்று அழைத்ததாகவும், அவருக்கு எனது நிலை தெரிந்தால் கண்டிப்பாக உதவுவார். இதை யாராவது அவரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என அந்த வீடியோவில் பேசினார்.  இதனிடையே நடிகர் ராகவா லாரன்ஸ் அந்த வீடியோவை பார்த்துவிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்த அவரது பதிவில், ''எனது நண்பர் எனக்கு இந்த வீடியோ அனுப்பினார். நான் இதை அஜித் சாரின் மேனஜருக்கு அனுப்புகிறேன். அவருக்கு இது சென்றடைந்தால் நிச்சயம் உதவி செய்வார். அவர் மிகவும் நல்ல மனிதர். மேலும் நானும் என்னால் முடிந்தளவில் உங்கள்  குழந்தைகளின் கல்விக்கு உதவுகிறேன்' என அவர் தெரிவித்துள்ளார். 

 

Entertainment sub editor