RRR Others USA
www.garudabazaar.com

”என்னோட ‘அந்த’ கனவு பொன்னியின் செல்வன்லதான் நிறைவேறுச்சு”…. கார்த்தி பகிர்ந்த வைரல் pic!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor karthi ponniyin selvan viral instagram pic with horse

"தெலுங்கு - இந்தி சினிமால இந்த ஹீரோக்களை தான் பிடிக்கும்" - மனம் திறந்த Rakul Preet Singh... செம தகவல்!

பருத்தி வீரன் to பொன்னியின் செல்வன்…

நடிகர் கார்த்தி பருத்தி வீரன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்து இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கிறார். தமிழைத் தவிர தெலுங்கு சினிமாவிலும் அவருக்கு குறிப்பிடத்தக்க ரசிகர்கள் உள்ளனர். தமிழ் நடிகர்கள் சங்கத் தேர்தலில் இரண்டு முறை பொருளாளர் பதவிக்கு போட்டியிட்டு இரண்டு முறையும் வெற்றி பெற்றவர். அவர் நடிப்பில் வெளியான பையா, நான் மகான் அல்ல, ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை, மெட்ராஸ், கொம்பன் மற்றும் கைதி ஆகிய படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தவை. இப்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி வந்தியத் தேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

Actor karthi ponniyin selvan viral instagram pic with horse

பொன்னியின் செல்வன்

இயக்குனர் மணிரத்னத்தின் பல ஆண்டுகால கனவுப்படைப்பான பொன்னியின் செல்வன் இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் முதல் பாகம் செப்டம்பர்  30 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் கார்த்தியின் வந்தியத்தேவன் கதாபாத்திரன் முதல் லுக் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

Actor karthi ponniyin selvan viral instagram pic with horse

கார்த்தியின் வைரல் பதிவு…

இந்நிலையில் தற்போது நடிகர் கார்த்தி தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், தான் குதிரையோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில், "நான் எப்போதும் குதிரைகளால் அதிகம் கவரப்பட்டுள்ளேன். காஷ்மோரா படத்துக்காக குதிரை ரைடு கற்றுக்கொண்டேன். ஆனால் அதை முழுவதுமாக நான் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில்தான் பயன்படுத்திக் கொண்டேன்.  பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு முழுவதுமே நான் குதிரை மீதுதான் அமர்ந்திருந்தேன். ஒரு குதிரை நம்மோடு உணர்வுப்பூர்வமாக இணையும் போது அந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.” எனக் கூறியுள்ளார். இந்த பதிவு இணையத்தில் இப்போது கவனத்தைப் பெற்று வருகிறது.

“கடவுள்கிட்ட இததான் கேக்குறோம்”… நயன்தாரா அப்பா குறித்து விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

Actor karthi ponniyin selvan viral instagram pic with horse

People looking for online information on Karthi, Ponniyin Selvan, Ponniyin selvan instagram picture will find this news story useful.