விபத்தில் உயிரிழ்ந்த ரசிகரின் உடலுக்கு நடிகர் கார்த்தி கண்ணீர் அஞ்சலி!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 30, 2019 10:13 AM
பிரபல திரைப்பட நடிகர் கார்த்தி, சாலை விபத்தில் உயிரிழந்த தனது ரசிகர் மன்றத்தின் அமைப்பாளரின் இறுதிச்சடங்கில் கலந்துக் கொண்டு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

நடிகர் கார்த்தியின் மக்கள் நல மன்றத்தின் சென்னை மாவட்ட அமைப்பாளர் வியாசை நித்தியா உளுந்தூர்பேட்டை அருகே நடந்த சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார். அவரது உடலை பார்த்து கண்ணீர்விட்டு அழுத நடிகர் கார்த்தி நேரில் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதேபோல் ஏற்கனவே சாலை விபத்தில் உயிரிழந்த தனது ரசிகரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பின், கார்களில் பயணம் செய்பவர்கள் நள்ளிரவு நேர பயணத்தினை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தலைபோகும் வேலையாக இருந்தாலும் இரவில் தூங்கிவிட்டு பகலில் பயணம் செய்யுங்கள் என்றும் நடிகர் கார்த்தி வேண்டுகோள் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.