ஷங்கர் - கமல் கூட்டணியில் உருவாகும் 'இந்தியன் 2' ஷூட்டிங் அப்டேட்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 30, 2019 02:46 PM
ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் படம் இந்தியன் 2. கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

ரத்னவேலு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் வித்யூத் ஜாம்வால், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
லைக்கா புரொடக்சன் சார்பாக சுபாஷ்கரன் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கல் போபாலில் நடைபெற்றது. தற்போது அங்கு படப்பிடிப்புகள் முடிவடைந்ததையடுத்து படக்குழு மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் என்ற இடத்தில் நேற்று முதல் (அக்டோபர் 29) தொடர்ந்து 12 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறதாம்.
Tags : Kamal Haasan, Indian 2, Shankar, Anirudh Ravichander