www.garudabazaar.com

Video : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்.. நடிகர் கமலின் அடுத்த படம்... தரமான டைட்டில் டீசர் வெளியானது..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. தளபதி விஜய் நடிக்கும் 'மாஸ்டர்' படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ். இந்த படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்ததாக அவர் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இது கமல்ஹாசனுக்கு 232 வது படம். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

Actor kamal and lokesh next movie title நடிகர் கமலின் அடுத்த படம்

இந்நிலையில் இந்த படத்திற்கு 'விக்ரம்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 1986-ல் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது நாம் அனைவரும் அறிந்த விஷயம். இந்நிலையில் வேட்டி சட்டையுடன் இருக்கும் சிலருடன் கமல்ஹாசன் அமர்ந்து அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவது போல இந்த டீசர் இடம்பெற்றுள்ளது. இதைப் பார்க்கும் பொழுது கைதி படத்தில் இடம்பெற்ற பிரியாணி சீன் தான் ஞாபகத்துக்கு வருகிறது. எது எப்படியோ அடுத்த சூப்பர் ஹிட் தயாராகிறது என்பது மட்டுமே என்று தெளிவாக தெரிகிறது.

VIDEO : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்.. நடிகர் கமலின் அடுத்த படம்... தரமான டைட்டில் டீசர் வெளியானது..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actor kamal and lokesh next movie title நடிகர் கமலின் அடுத்த படம்

People looking for online information on Kamal hassan, Lokesh, Master will find this news story useful.