''அப்பாவை டெய்லி மிஸ் பண்றேன்..!" - நடிகர் முரளியுடன் அதர்வாவின் எமோஷனல் நினைவுகள்.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் அதர்வா, அவரது தந்தை முரளியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் 80-களில் முன்னணி கதாநாயகனாக கலக்கியவர் முரளி. இவர் நடித்த இதயம், பொற்காலம் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. இவர் 2010-ஆம் ஆண்டில் காலமானார். தற்போது இவரின் மகனான அதர்வா, தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் அதர்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இன்று தனது தந்தை முரளிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள அவர், ''எனக்கு தெரிந்தவரை, ரொம்ப கூலான, அதே சமயம் மிகவும் வலிமையான மனிதர் நீங்கள்தான். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா. உங்களை தினமும் காதலித்து கொண்டும், மிஸ் செய்து கொண்டும் இருக்கிறோம்'' என எமோஷனலாக பதிவிட்டுள்ளார். மேலும் இத்துடன் சிறுவயதில் அப்பாவுடன் எடுத்த க்ளாசிக் போட்டோவை அவர் பகிர்ந்துள்ளார்.