www.garudabazaar.com

நடிகர் கமல், அர்ஜூன், விக்ரமை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் அருண் விஜய்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகர் அருண் விஜய் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக டிவிட்டரில் அறிவித்துள்ளார். 

Actor Arunvijay affected from corona covid positive

புதிய படத்தில் பாலையாவுக்கு ஜோடியாகும் பிரபல தமிழ் நடிகை இவங்க தான்..!

கொரோனா தொற்று

நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர். தற்போது தனது மாமாவான இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் முதல் முறையாக யானை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் டிவிட்டரில் "தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், அதன் காரணமாக வீட்டுத்தனிமையில் இருப்பதாகவும் அறிவித்துள்ளார். டாக்டர் அறிவுரைப்படி பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து வருவதாகவும்" டிவிட்டரில் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதற்கும் முன் நடிகர் அர்ஜூன் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். ஏற்கனவே விக்ரம், கமல்ஹாசனும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியது குறிப்பிடத்தக்கது.

Actor Arunvijay affected from corona covid positive

  “யானை”

இந்த வருடத்தில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றாக,  இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்கும் “யானை” படம் உருவாகியுள்ளது. இயக்குநர் ஹரியின் தனித்த முத்திரையில், கிராமத்து பின்னணி கலந்த குடும்பங்கள் கொண்டாடும் ஆக்சன் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.  இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிக்கப்பட்டு தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் இணையத்தில் வெளியான இப்படத்தின் டீசர், ரசிகர்களிடம் பெரும்வரவேற்பை குவித்ததுடன், 2 மில்லியன் பார்வைகளை குறைந்த நேரத்தில்  கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த டீசர் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டுவதாக அமைந்துள்ளது.

Actor Arunvijay affected from corona covid positive

யானை படக்குழு

இப்படத்தில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். மேலும் சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல்விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்காக  இராமேஸ்வரத்தில் தீவு போன்ற பிரமாண்ட செட் அமைத்து, படப்பிடிப்பு நடைபெற்றது.  சென்னையில் சில முக்கிய காட்சிகளும், பழநி பகுதிகளிலும் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. நடிகர் அருண் விஜய் இதுவரை திரையில் கண்டிராத வேடத்தில் நடித்துள்ளார்.

Actor Arunvijay affected from corona covid positive

பிரபல OTT-யில் வெளியாகப்போகும் BLOCKBUSTER புஷ்பா திரைப்படம்! எப்போ? எந்த OTT தெரியுமா?

தொடர்புடைய இணைப்புகள்

Actor Arunvijay affected from corona covid positive

People looking for online information on Arun Vijay, Corona, Covid, Yaanai will find this news story useful.