www.garudabazaar.com

நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா பாதிப்பு! "எல்லாரும் ஜாக்கிரதையா இருங்க" - அவரே வெளியிட்ட அறிக்கை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அர்ஜூன் தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக வலம் வருபவர்.

Actor Arjun confirmed He is suffered from corona infection

கடைசியாக ஹர்பஜன் சிங் நடித்த பிரண்ட்சிப் படத்தில் முக்கிய வேடத்தில் காணப்பட்டார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சர்வைவர்’  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நடிகர் விக்ராந்த், நந்தா, நாராயண், இனிகோ பிரபாகர், ஐஸ்வர்யா கிருஷ்ணன், விஜய லட்சுமி, காயத்ரி, இந்திரஜா சங்கர், பெசன்ட் ரவி, பார்வதி, உமாபதி, சரண், லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி, ஆகியோர் இந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக ஆப்ரிக்காவில் உள்ள சாசிபார் தீவில் பங்கேற்றனர். இதில் விஜய லட்சுமி முதலிடம் பிடித்து ஒரு கோடி ரூபாயை பரிசாக வாக்குகள் அடிப்படையில் வென்றார். 

Actor Arjun confirmed He is suffered from corona infection

இந்நிலையில் நடிகர் அர்ஜூன் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். அதில் "கொரோனா பரிசோதனை முடிவில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிகிச்சை எடுத்து  தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து தனிமைபடுத்தி கொள்ளுங்கள் என கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து அனைவரும் ஜாக்கிரதையாக இருங்கள். முககவசம் அணிந்துகொள்ள மறக்காதீர். ராம பக்த ஹனுமான் கி, ஜெய்!" என குறிப்பிட்டுள்ளார்.

Actor Arjun confirmed He is suffered from corona infection

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Arjun confirmed He is suffered from corona infection

People looking for online information on Action king, Arjun, Arjun Sarja, அர்ஜூன், ஆக்ஷன் கிங், கொரோனா, கோவிட், Corona, Corona Positive, Covid will find this news story useful.