பிரபல குணச்சித்திர நடிகரும் இசையமைப்பாளருமான டி.எஸ்.ராகவேந்திரா காலமானார்
முகப்பு > சினிமா செய்திகள்பல படங்களில் தனது நடிப்பின் மூலம் அசத்திய குணச்சித்திர நடிகர் டி.எஸ்.ராகவேந்திரா காலமானார்.

வைதேகி காத்திருந்தால் படத்தில் ரேவதியின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்த டி.எஸ்.ராகவேந்திரா, அதன் பிறகு தமிழ் சினிமாவில் பிரபலமானார். இதையடுத்து பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் அவர் நடிக்க ஆரம்பித்தார். சிந்து பைரவி, விக்ரம், சின்னத்தம்பி பெரியத்தம்பி, நீ வருவாய் என உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில் டி.எஸ்.ராகவேந்திரா காலமானார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இன்று மதியம் 2 மணி அளவில் சென்னை கே.கே நகரில் அவரது இறுதிசடங்குகள் நடைபெறவுள்ளது. நடிப்பது மட்டுமன்றி, உயிர், யாகசாலை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Actor #TSRaghavendhar passed away.... final rites at 2:pm today Old No:21 New No:39,Ponnamballam Salai West K K Nagar Chennai-78 - RIP! pic.twitter.com/z8SlIsYeiK
— NadigarSangam PrNews (@NadigarsangamP) January 30, 2020