www.garudabazaar.com

துணிவு ஷூட்டிங் முடிஞ்சதும் அஜித் எங்கே போயிருக்காரு பாருங்க.. ரசிகர்களுடன் வைரல் போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித் குமார்.

Actor Ajith Kumar AK Bike Ride at Meghalaya Borders

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்திற்க்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. பல இளைஞர்களுக்கு நடிகர் அஜித் ஆதர்ச நாயகனாக இருக்கிறார். சமூக வலைதளங்களான பேஸ்புக்,டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்குகள் எதுவும் இவருக்கு கிடையாது. சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கியே இன்று வரை இருந்து வருகிறார். ரசிகர்களின் ரசிகர் மன்ற கணக்குகளே சமூக வலைதளங்களில் இருந்து வருகின்றன.

சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளிவந்தது. வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

வலிமை படத்திற்கு பிறகு அஜித், துணிவு படத்தில் நடித்து முடித்துள்ளார். துணிவு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

Actor Ajith Kumar AK Bike Ride at Meghalaya Borders

படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் நடிகர் அஜித் தனது BMW  பைக்கை எடுத்துக்கொண்டு சுற்றுப்பயணம் செல்வதை வழக்கமாக கொண்டவர்.நடிகர் அஜித், ஐரோப்பிய நாடுகளில் சில நாட்களுக்கு முன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.  ஐரோப்பிய பைக் சுற்றுப்பயணத்துக்கு பின் நடிகர் அஜித்,  துணிவு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

துணிவு படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு இடைவேளையில் நடிகர் அஜித்,  தனது நண்பர்களுடன் இமயமலையில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணாலி, ரோதாங், ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் & லே பகுதியில்  பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் ரிஷிகேஷ், கேதர்நாத், பத்ரிநாத் கோயிலில் நடிகர் அஜித்குமார் சாமி தரிசனம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

Actor Ajith Kumar AK Bike Ride at Meghalaya Borders

இந்நிலையில் துணிவு படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் நடிகர் அஜித் குமார், தற்போது மேகாலயா மாநிலத்தில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று நடிகர் அஜித், மேகாலயா பார்டரில் பைக் ரைடு சென்ற போது, பாண்டிச்சேரியை சார்ந்த ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் பாண்டிச்சேரி அஜித் ரசிகர்கள் மூலம் தற்போது வெளியாகி உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Actor Ajith Kumar AK Bike Ride at Meghalaya Borders

People looking for online information on Ajith Kumar, AK, Thunivu will find this news story useful.